தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை - 70 = 173

பூவிதழ் மெல்ல சிரிக்குது - அது
சூரியகதிரை கொள்ளை அடிக்குது
அதன் வித்தக இதழில் முத்தமிட
ஆசை கொள்ளுது மன்மதவண்டு..!”

பூக்கள் வெகுநேரம் தூங்கும் காலம் – பனி காலம்..!
பகலவன் அந்நேரம் அன்னநடைப்போடும் – வெகுநேரம்..!
பூவைவிட மெல்லிய பூ - காதலென்னும் காம பூ..! – அது
கால நேரம் தெரியாமல் பூக்கின்ற சுகமான மோக பூ..!

வானவில் தோன்றும் நேரம் வானிலே மந்தகாசம்
புன்னகை சிந்தவைக்கும் வானிலை மர்மதேசம்
ஆண்மயில் ஆடும்நேரம் வான்மழை வந்துதூவூம்
ஆண்மை அந்தநேரம் ஆளிங்கணம் செய்யத்தூண்டும்…!

நாடோடி பாடல்களில் நீளமான சந்தமுண்டு – அது
காதலை பாடும்போது பன்னீர் கற்கண்டு
ஓடோடி வந்தேனடி, உன்முகம் காணவேண்டி
மன்மத பூவே நீ மஞ்சத்தில் தஞ்சமடி..!



கவிதை கண்கள் உனது விழிகள்
மனதை கவரும் மன்மத கனிகள்
காதல் நதியில் நீராடும் நேரம்
மனித பூக்கள் மன்மத வலையில்..!

சிறகொடிந்த பறவை சிறகடிக்க வாய்ப்பில்லை…
சிதறவிட்ட மனதை சீர்செய்வது சிரமமில்லை..
யுகயுகமாய் காதல் யாகத்தில் அலுப்பில்லை
மகாமகம்போல் காதல் தீர்த்தத்தில் சலிப்பில்லை..

ஒத்தையடி பாதையில் நீபோன வேளையில்
சத்தமின்றி நான்வந்தேன் உனது நிழலடியில்
மனக்கண்ணை நீதிறந்து என்னைக் கண்டுக்கொண்டாய்
உனக்கென்று என்னைத்தந்தேன் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டாய்…

எழுதியவர் : சாய்மாறன் (26-Jul-16, 5:41 pm)
பார்வை : 103

மேலே