கடைசி பெட்டி
முருகேசு ஒரு நாள் சென்னையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் சென்றார்.
ரயிலில் கடைசி பெட்டி அவருடையது.
ரயில் புறப்பட்டது. அடுத்த ஸ்டேஷன் வந்தது. முருகேசன் தண்ணீர் பாட்டில் வாங்க விரும்பினார். எட்டிப்பார்த்தார்.
அவரது கம்பார்ட்மென்ட் பிளாட்பாரத்துக்கு வெளியில் நின்றதால், நடைபாதை வியாபாரிகள் இதற்கு முந்தய பெட்டி வரை வருகிறார்கள். ஆனால் இவர் இருந்த பெட்டிக்கு வருவதில்லை.
ரயில் மீண்டும் புறப்பட்டது, அடுத்த ஸ்டேஷன் வந்தது. முருகேசன் சாப்பிட ஏதாவது வாங்க விரும்பினார்.
வழக்கம்போல அவரது கம்பார்ட்மென்ட் பிளாட்பாரத்துக்கு வெளியே நின்றிருந்தது.
திருச்சி ஜங்ஷன் வரும்வரை இதே கதைதான்.
திருச்சியில் இறங்கினார் முருகேசன். நேராக ஸ்டேஷன் மாஸ்ட்டர் அலுவலக்த்துக்கு சென்றார்.
புகார் புத்தகம் வேண்டும் என்று கேட்டார். கொடுக்கப்பட்டது.
அதில் எழுதினார், “ இனி எந்த ரயிலிலும் கடைசி பெட்டி இருக்கக்கூடாது பிளீஸ் "
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
