இதற்கு பெயர்தான் காதலா
இதற்கு பெயர்தான் காதலா....??
தன்னந் தனிமையில் நானும்
வெட்டவெளி பார்க்கிறேன்....
உச்சி வெயிலில் நானும்
வெண்ணிலவை தேடினேன்....!
நடுங்கும் இரவில் நானும்
பகலவனை காண்கிறேன்...
பஞ்சு மெத்தையில் தினமும்
பகல் கனவில் திளைக்கிறேன்.....!
விழி திறந்து எனை பார்க்கவும்
வெட்கப்பட்டு நிற்கிறேன்....
தொலைதூரம் பார்த்தே நானும்
தொடர்பின்றி சிரிக்கிறேன்....!
நட்சத்திரம் இணைத்தே நானும்
கோலமிட்டு ரசிக்கிறேன்......
கவி என்ற பெயரில் நானும்
உன் பெயரை கிறுக்கினேன்.....!
வாய் பேச்சில் வென்றவள் நானும்
வாய் மூடி நிற்கிறேன்......
வானவேடிக்கை காட்டியவள் ஏனோ
உன் வசமிழந்து தோற்கிறேன்.....!
காதல் என்று சொன்னால் நானும்
கால் கடுக்க ஓடியவள் ஏனோ.......
கால நேரம் மறந்தே இன்று
காதல் மழையில் நனைகிறேன்......!!