குற்றத்தின் சிறையில் முளைத்த காதல்

சிறு வயதில் தாயை இழந்தால்
சிறிதும் சிந்திக்காத தந்தை
தேகத்தின் மீது கொண்ட காம
தாகத்தில் முதல் மனைவி தேகம்
தீயில் கருகும் முன் மாற்றான் தாய் உனக்கு
இவள் என அறிமுகம் செய்தான் தன்
மகளுக்கு ! சந்தோசம் கொண்டாள் மகள்
இன்னொரு தாய் வந்தால் எனக்கு என்று
ஆனால் மாற்றான் தாயோ தன்
கருவில் உண்டான மகன் நலன் தேடி
சகுனி போல் சூழ்ச்சி செய்தாள்
தூண்டினாள் தந்தையை காம தந்தை
செய்யா தவறில் சிக்கவைத்து சிறுவர்
சீர்திருத்த பள்ளியில் அடைத்தான் அவளை !
இது விதியின் செயலா ! தந்தையின் செயலா !


மண்ணில் பிறந்தான் நல்ல மகனாய்
கல்வியில் சேர்ந்தான் சிறந்தான்
தொட்டான் பதினாறு கெட்டான் வாழ்க்கையில்
கூடா நட்பு கேடாய் முடிய
மதுவில் மயங்கி மங்கையின் மோகத்தில்
திளைத்து செய்யா குற்றத்துக்கு சிறை, சிறை
செல்லும் முன் சிதைந்து போனது
பெற்றோர்களின் சதை சிதையில் !
இது விதியின் செயலா ! ஆசையின் செயலா !

மாற்றான் தாயின் தவறால்
சிறை வந்த அவளும்
மாற்றான் செய்த தவறில்
சிறை வந்த அவனும் சந்தித்தனர்
சிறையில் !

சில காலம் தாயை காணாத
அவன் மங்கை அவளை பார்த்ததும்
தாயின் நினைவு கொண்டு கதறினான்
கடல் அலை போல் கண்ணீர் கொண்டு !

காரணம் கேட்டாள் கதை சொன்னான்
கருணை கொண்டாள் அவன் மீது
கருணை காதலாய் மாறி
சிறை விடுத்து
இரு மனம் இணைந்து திருமண
வாழ்வில் கலந்து !
குற்றவாளி இல்லை இனி நாம்
பழயது மறந்து புது வசந்தம் வாழ்க்கையில்
படைக்க ஆயுத்தம் ஆனார்கள் .



(mohamed sarfan எழுதிய எண்ணத்திலிருந்து நான் எழுதிய கவிதை இது நன்றி mohamedsarfan )

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (29-Jul-16, 12:02 am)
பார்வை : 64

மேலே