காணாமல் போன உயிர்

காதல் கனிந்து
கல்யாண
நாள் குறித்து
சுற்றமும் உற்றமும்
சுற்றி நின்று
வாழ்த்து சொல்லி
மண மாலை
மாற்றி
மங்கலநாண்
பூட்டி
அரு சுவை
உணவருந்தி
ஆனந்தமாய்
ஆரம்பித்தது
வாழ்க்கை!! .

புது வீடு
புது மனைவி
புது பைக்கு.
எல்லாம்
பிரமாதம் !!

மூன்றாம் நாள்
விடியலிலே ?

கண்ணே !
என் நண்பனை
பார்த்துவிட்டு
நண்பகலில்
வந்திடுவேன்
நல்லுணவு
சமைத்து வை
நான் வந்ததும்
சாப்பிடலாம்.
தலைக்கவசம்
இல்லாமல்
தன் புது பைக்கில்
புறப்பட்டான் .

நண் பகலில்
வரவில்லை
நண்பன் செய்தி
சொல்லவில்லை
இரவு எட்டு மணி
ஆன பின்பும்
இருக்குமிடம்
தெரியவில்லை.
வருவான்
வருவானென்று ,
வஞ்சி அவள்
காத்திருந்தாள்.....

இடி விழுந்த
செய்தி ஒண்ணு
இரவு
பத்து மணிக்கு
வந்தது
மாட்டு வண்டி
ஒன்றில் மோதி
மாண்டு விட்டான்
என்பதாய்.

மணப்பந்தல்
மரணப்
பந்தலானது
மண மாலை
வாடும் முன்னே
மரண ஓலை
வந்தது
உருண்டாள்
புரண்டாள்
அழுதழுது
அரற்றினாள்
அப்படியே
மயங்கினாள்.
மயங்கி
எழுந்த பின்னர்

மாண்டவர்
மீண்டதில்லை
மீண்டும் வந்து
வாழ்ந்ததில்லை
உன் நிலையை
பார்த்து நிற்க
எங்களாலும்
முடியவில்லை
ஆறுதல்கள்
சொல்லி சொல்லி
உற்றார்
ஆற்றுபடுத்தினரே.

அப்பாஅப்பா
என்றாள்.
அப்பாவும்
அருகில் வந்தார்.

அப்பா !

சாஸ்திரங்கள்
சொன்னபடி
திருமணந்தான்
செய்து வைத்தீர் .
பாத்திரங்கள்
பண்டங்களும்
பல லட்சம்
நகை நட்டும்
புது வீடும்
புது பைக்கும்
எல்லாமே
சீர் செய்தீர்
ஆனால்
ஓன்று மட்டும்
கொடுக்க வில்லை ;
ஏன் அப்பா ?
என்றழுதாள்.

உயர்ந்த
பொருள்அப்பா
உயிர் காக்கும்
கவசமப்பா
எனக்குத்தான்
தரவில்லை
என் தங்கைக்கு
மறக்காமல் சீராய்
கொடுத்திடுங்கள்
தலைக்கவசம்
அணிந்திருந்தால்
எமன் தான்
மறிப்பானோ?
என் தலைவன் தான்
மரிப்பானோ?

ஐயா ,
உற்றார் உறவினரே
இரு சக்கர ஓட்டுனரே
உங்களுக்கு
சொல்லுகிறேன்

ரோடு
நமக்கு மட்டும்
சொந்தமில்லை
விழுந்தா
தூக்கி விட
நாதி இல்லை.
சாலை விதி
மதிக்கலன்னா
நமது உயிர்
நமக்கு இல்லை
உங்களை
எதிர் பார்த்து
குடும்பம்
காத்திருக்கும்
உயிர் போனால்
வருவதில்லை
குடும்பத்தில்
அமைதி இல்லை

ஆகையினால்
கட்டாயம்
தலைக்கவசம்
அணிந்திடுங்கள்
அரசு இட்ட
ஆணைதனை
தட்டாமல்
மதித்திடுங்கள்.
விபத்து தனை
தவிர்த்திடுங்கள்
உயிர் காத்து
வாழ்ந்திடுங்கள் .







எழுதியவர் : NELLAI THILLAI (25-Jun-11, 1:24 am)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : kanaamal pona uyir
பார்வை : 463

மேலே