உணவு உண்ணும் வழிமுறைகள் ஆச்சார கோவையின் படி----படித்தது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ,
ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். 'ஆசார வித்து' (1) என்று தொடங்கி, 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் தாம் கூறப் புகுந்த ஆசாரங்களை ஒரு நெறிப்பட ஆசிரியர் கோவை செய்துள்ளார். பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டிய கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் அதிகம் காணப்படுகின்றன.
.உணவு உண்ணும் முறைமை (இன்னிசை வெண்பா ) பாடல் -18

• நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்

2.கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை (இன்னிசை சிந்தியல் வெண்பா ) பாடல் -19
• கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.
3.உண்ணும் விதம் (இன்னிசை வெண்பா ) பாடல் -20
•ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்

4.உண்ணக் கூடாத முறைகள் (இன்னிசை சிந்தியல் வெண்பா )

•படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.

5.பெரியோருடன் இருந்து உண்ணும் முறை (இன்னிசை சிந்தியல் வெண்பா )

•தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.

6.கசக்கும் சுவை முதலிய பொருட்கள் உண்ணும் முறைமை (இன்னிசை சிந்தியல் வெண்பா ) பாடல் -25

• உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.

7.உண்ணும் கலம் (இன்னிசை வெண்பா ) பாடல் -26

•தம்மைவிட மூத்தாருடன் உண்ணுதல் கூடாது. அப்படி உண்ணும்போது ஒழுங்குப்படி சிறிய கலங்களை கொண்டு ஒழுக்கம் தவறாமல் உண்டு அக்கலங்களை உடனே முறைப்படி நீக்க வேண்டும்.


8.உண்டபின் செய்ய வேண்டியவை (பஃறொடை வெண்பா) பாடல் -27

• வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.

9.தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

• பிறர்க்காக அன்றி தனக்காக உலை வையார், உணவு உட்கொள்ளார், எச்சிற்படுத்தார், மனையில் இருக்கும் தெய்வங்களுக்கு ஊட்டினதை அறிந்து பின் தாம் உண்பார்

நெறியின் படி உண்ண எனது வாழ்த்துக்கள்

எழுதியவர் : (30-Jul-16, 4:11 pm)
பார்வை : 488

மேலே