நடக்குமா அது
சிறு வயதில்
தந்தை எனை திட்டினார்
சரியாக செய் என்று
இன்னும் எனை திட்டுகிறார்
சரியாக செய் என்று
நான் அதற்கு சொல்கிறேன்
" நான் ஒன்றும் சிறு குழந்தை அல்ல.
எனக்கு எல்லாம் தெரியும்.
என் வேலையை நான் பார்த்துக்கொள்வேன்
என்று
என் அப்பாவையே எதிர்த்து பேசுகிறேன்
அதன் பிறகு
தான் யோசிக்கிறேன்
நான் எப்பொழுது வளர்ந்தேன்
என் தந்தையை விட
நடக்குமா அது ?
நான் எப்பொழுதுமே
என் தந்தை கண்ணிற்கு
குழந்தை தானே.....
என் தாய் எனை பார்த்து
"இன்னும் சின்ன குழந்தை போலவே
நடந்துக்கிற
குழந்தையில எப்படி இருந்தியோ
அதே மாதிரியே
ஒரு புத்தகத்த எடுக்கறதுக்கு
எல்லா புத்தகத்தையும் கலச்சிபோட்ற.
இதல அப்பா கிட்ட கூட கூட
ஏட்டிக்கு போட்டி பேசற..."
அது என்னவோ சரிதான்.
கூடவே ஒட்டிக்கொண்டு வந்த வால் தனமாயிற்றே.....
இன்று
என் குழந்தைகளை
நான்
பார்க்கும் பொழுது(பார்வையில்) தான்
என் தந்தையின்
எண்ணம்
இன்னும்
தெளிவாய் புரிகிறது
என் அப்பா இருசக்கர வாகனத்தில்
எப்பொழுதும்
என்னை முன்னால் தான் நிற்க வைப்பார்
அப்பா நான் வளந்துட்டன்.
எனக்கு பின்னாடி தான் இருக்கை வேணும்னு
சொன்னா.
எத்தனை வருடம் ஆனாலும்
என்னைக்கும் நீ எனக்கு குழந்தை தான்
என்று சொன்னது நினைவுக்கு வருகிறது
நான் சபரிமலைக்கு மாலைபோட்டிருந்த தருணம்
என் தாய்
என் கன்னத்தில்
ஒரு முத்தமிட்டாள்
அப்பொழுது
ஒரு பெண்
சொன்னாள்
இப்பொழுதெல்லாம்
நீங்கள்
முத்தம் தரக்கூடாது
என்று.
அதற்கு
நான் சொன்னேன்.
என்றும் என் தாய்க்கு நான்
மகள்
அவள் எப்பொழுது வேண்டுமானாலும்
எனக்கு முத்தம் தரலாம் என்று.
அப்படி சொன்ன பிரபா தான்
இன்று
இப்படியும் சொல்கிறேனா!
இது சமுகத்தின் மாற்றமா
இல்லை சூழலின் மாற்றமா.....
எப்படி இருந்தாலும்
என் தந்தைக்கும்
தாய்க்கும்
நான் என்றும்
சிறு பிள்ளை தான்
நான் கற்றதெல்லாம்
அவர்களின் பாதத்தின் கீழே
நான்
காணுவதெல்லாம்
அவர்களின் கண்களின் வழியே
நான் கேட்பதெல்லாம்
அவர்களின் தாலாட்டு
நானே
அவர்களின் உயிர் தான்
இந்த உயிர் என்றும்
அவர்களின் மடியில் தான்
சமர்ப்பணம்
என் உயிரையும்
இவ்வரிகளையும்
என் உயிர்களின்
பாதத்தில் சமர்பிக்கிறேன்
~ உங்கள் மகள்
பிரபாவதி விஜயலட்சுமி வீரமுத்து