காதலை தேடி-9

காதலை(லே) தேடி-9

கடல் கடந்து சென்றும்
உன் நினைவுகளை
கடக்க இயலாமல்
நாட்களை கடந்து கொண்டிருக்கிறேன்......
எத்தனை நாள் இந்த
மௌன நாடகம்........
உன்னோடு இறுதியாய்
ஒருமுறை பேசிவிடவே
இறுதிமூச்சோடு வந்துகொண்டிருக்கிறேன்....
உன்னை தொலைத்த உன்னவனாகவே.......

கெட்டி மேளம் கெட்டி மேளம்...................

என்னவளை கைபிடித்து என் கரம் சேர்த்த நிமிடம் வான் எங்கும் சிறகடித்து பூமழையில் நனைந்ததை போல் அத்தனை மகிழ்ச்சி என் மனதுக்கு........அந்த இரண்டு முடிச்சியை அவள் கழுத்தில் சிரித்த மஞ்சள் தாலியில் முடிந்த நேரம் எதையோ பெரிதாய் சாதித்ததை போல் எல்லை கடந்த திருப்தி....மூன்றாம் முடிச்சி நாத்தனார் தான் போடணும் என்று வம்படியாய் போட்டுவிட்டாள் என் செல்லமான ராதிகா அக்கா........

சகியை பாக்க பாக்க எங்களுக்கான தனிமை சந்திப்பு எப்பொழுது கிடைக்குமோ என்று அடித்துக்கொண்டு தவித்தது என் உள்ளம்.......திருமணம் இனிதே முடிந்து எல்லா சம்பிரதாயங்களும் ஓரளவு முடித்தவிட்ட கையோடு எங்களுக்கான ஒய்வு காலத்திற்குள் நுழைய மணி மாலை நான்கை தாண்டியிருந்தது........வந்தவர், தெரிந்தவர் என பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசியை பெறுவதற்குள் சகிக்கும் எனக்கும் இடுப்பு உடைந்து போகும் அளவிற்கு வலிக்க தான் செய்தது..........ஏற்கனவே அம்மாவிற்கு கொஞ்சம் என் மீது கோவம் ஒட்டிக்கொண்டிருந்தது தெரிந்ததே........

அதனால் எல்லா ஊர் சம்பிரதாயங்களையும் எங்கள் திருமணத்தில் நிறைவேற்றிவிட்டு சக்கையாய் எங்களை பிழிந்துவிட்டார் என்று என் ஏழாம் அறிவு உணர்த்தியது உண்மையே தான்......குட்டி எட்டடி பாய்ந்தால் தாய் பதினாறடி பாய்வார் என்பதை இந்த நேரத்திலா நிரூபிக்க வேண்டும்........

சரி எல்லாவற்றையும் சகிக்காகவே பொறுத்துக்கொள்ள வேண்டியதாய் அமைதி காத்து கொண்டிருந்தேன்.......என் ஆறுதல் எல்லாம் இன்று நடக்க போகிற எங்கள் முதல் இரவு மட்டுமே.........தப்பா நினைக்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.....ஆனா அதெல்லாம் இல்ல, நானும் சகியும் தனிமையில் எங்கள் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த முதல் இரவு இன்று தானே, அதை தான் சொன்னேன்.......அது மட்டுமில்லாமல் சகி போட்ட முதல் கண்டிஷனே எங்களுக்குள் கணவன் மனைவியாய் எந்த சமாச்சாரமும் இருக்க கூடாது என்பதே............சரி அதெல்லாம் அடுத்த விஷயம், முதலில் அவளோடு தனிமையில் பேசினாலே போதும் என்று எதிர்பார்ப்போடு நிலவின் வருகைக்காய் காத்திருந்தேன்.........

இரவில் நிலவு வந்தது என்னவோ வழக்கமான ஒன்று தான், ஆனால் என் நிலவு தான் என் அறைக்கு வரவே இல்லை..........அங்கேயும் இங்கேயுமாய் குட்டி போட்ட பூனை போல் விரல் நகத்தை கடித்து முடித்துவிட்டு விரலுக்கு பற்கள் பாய்ந்த போதுதான் சரி அப்பாகிட்டயே இதை பத்தி கேட்டு விடலாம் என்ற முடிவோடு மாடியில் இருந்து ஹால் நோக்கி நடந்தால் என் ரூமை நோக்கி அம்மா வந்து கொண்டிருந்தார்.......

என்னோட காதல் வழிந்த முகத்தை பார்த்து அவரே என் கேள்விக்கான பதிலை அணுகுண்டாய் என் காதில் வெடித்திவிட்டார்........

"தம்பி நீ உன் ரூம்ல படுத்துக்கோப்பா, சகி இன்னைக்கு என்கூடவே படுத்துப்பா......"

"ஏன்மா, என்னாச்சு......." அதற்குமேல் என்ன கேட்பதென்று தெரியாமல் என் பலவிதமான சந்தேகங்களுக்கு இரண்டே வார்த்தைகளில் விடை தேட துடித்தேன்......

"உங்க ஜாதகப்படி இன்னைக்கு நாள் நல்லா இல்லையாம்ப்பா, இன்னைக்கு சேர்ந்தா வம்சம் விருத்தியாகாதுனு ஜோசியர் சொல்லிட்டார்" வேற ஒரு நல்ல நாளா பார்த்து வச்சிக்கலாம்னு சொல்லிருக்காரு.......

"புள்ஷெட், என் முதலிரவுக்கு எவனோ ஒருத்தன் நாள் குறிக்கறானாம், அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும் நானே அவனுக்கு நாள் குறிச்சிடுவேன்..."

"ம்ம்ம், சரிம்மா" இதை தவிர வேற என்ன பதிலை நான் சொல்ல முடியும்........

"பாருப்பா மறந்தே போய்ட்டேன், உன்ன சாப்பிட கூப்பிட தான் வந்தேன் வேற எத எதையோ பேசிட்டு இத சொல்ல மறந்து போய்ட்டேன்........வாப்பா சாப்பிடலாம்"

இப்போ சாப்பாடு தான் ரொம்ப முக்கியமா, என் ஆசை, எதிர்பார்ப்பெல்லாம் அந்த ஜோசியர் வச்ச ஆப்புல கரைஞ்சி போச்சு, இப்போ வந்து சாப்பிடலாம், சந்திரனுக்கு போலாம்னுட்டு.....

"சகி சாப்பிட்டாளாம்மா"

"அவ அப்பவே சாப்பிட்டு படுத்துட்டாப்பா, நீ தான் உன் பிரண்ட்ஸ் கிட்ட போன்ல பேசிட்டே ரொம்ப லேட் பண்ணிட்ட, சரி நீயும் வந்து சாப்பிட்டு படுத்தா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு லைட் ஆப் பண்ணிட்டு தூங்கலாமேன்னு பாத்தேன்....."

"அம்மா காலைல இருந்து ஓடியாடி எவ்ளோ வேலை பாத்துருப்பீங்க, நீங்க போய் தூங்கலாம்ல, பசிச்சா நானே போட்டு சாப்பிட்டுக்க போறேன், எதுக்கு நீங்க முழிச்சிருந்து உங்க உடம்ப கெடுத்துக்கறிங்க.........அதுவும் இல்லாம எனக்கு பசிக்கவே இல்லை, டயர்டா இருக்கு, நான் தூங்க போறேன்மா, நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க........"


"சோர்வா இருக்காதா பின்ன, காலைல இருந்து எத்தனை அலைச்சல், இருந்தாலும் சாப்பிட்டுட்டு படுப்பா.......அப்போ தான் உடம்புக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும், சாப்பிடாம படுத்தா காலைல இன்னும் சோர்ந்து போயிருப்ப, புது மாப்பிள்ளை இப்படி சோர்ந்து இருக்க கூடாதுப்பா, நாளைக்கு கல்யாணத்துக்கு வரமுடியாதவங்கள்லாம் வாழ்த்த வருவாங்க, அப்போ உன்முகம் சோர்வுல கருத்து போயிருந்தா பார்க்க நல்லாருக்காதுப்பா"

"அம்மா........போதும்,கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன், நீங்க போய் படுத்துகோங்க"

"கண்டிப்பா சாப்பிட்டு தான் படுக்கணும்" என்று அக்கறை கலந்த கண்டிப்போடு கூறிவிட்டு அம்மா நகர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.......

எனக்கு மட்டும் இப்படி நடக்குதா, இல்லை எல்லாருக்குமே இப்படி தான் நடக்குமா.......

சகி தான் வேணும்னு எல்லாரையும் சமாளிக்கறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன், இதுல சகியோட கண்டிஷன்ஸ் வேற ஒரு பக்கம், இதெல்லாம் போதாதுன்னு பர்ஸ்ட் நைட் கேன்சல் வேற........"கடவுளே இந்த அப்பாவி மானிடனை இந்த அளவுக்கு சோதிப்பது நியாயமா?" என்று சாரதியின் மனம் புலம்பிக்கொண்டிருக்க இதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தான், உன் வாழ்க்கையே சோதனை களம் தான், இனி தான் என் விளையாட்டை பாக்க போகிறாய்" னு மைண்ட் வாய்ஸ்ல கடவுள் சிரிக்கறதெல்லாம் நம்ப ஹீரோவுக்கு தெரிய போறதில்லையே......

எழுதியவர் : இந்திராணி (1-Aug-16, 1:29 pm)
பார்வை : 444

மேலே