தமிழ் பெண்

தமிழ் பேசும் அழகிய தமிழ்
தமிழ் மகளே !
நீ பேசும் தமிழ் அழகு
பேசிய வார்த்தையில் பிழை
வந்தால் சிறு நாணத்துடன்
உதடு கடிப்பது அழகு...
உன் கருமை நிறமும்
என்னை இரசிக்க செய்வது
எனோ... ஆம் அழகு
சிலை உன் மேனி...
என்னுடன் நட்பு கொள்ள
நான் என்ன தவம் செய்தேனோ...

என் தவறுகளை நீ இரசித்தாய்...
உன் சிரிப்பு என்னை
மறக்கடிக்க செய்தது...
அழகிய தமிழ் மகளே
என்ன தவம் செய்தேனோ?
இந்த பிறப்பில்
உன்னிடம் கொஞ்சி பேச...
நான் உன்னை விரும்புகிறேன்
என்று தெரிந்தும் நீ
என் ஆண்மைக்கு மதிப்பளித்த
உன் பெண்மை அழகு...
உன் பெண்மை என்னை
இந்த மண்ணில் மேலும்
வாழ ஆசை கொண்டது...

நீ பெண்ணாக பிறந்ததின்
அழகு... ஆணாக பிறந்ததால்
நான் இரசிக்க அதிஷ்டம்
கொண்டிருக்கிறேன்...
என் அழகிய தமிழ் மகளே...

எழுதியவர் : பவநி (2-Aug-16, 2:45 pm)
Tanglish : thamizh pen
பார்வை : 173

மேலே