கண்கள் ..!
இவர்கள் இரட்டை பிறவிகள் .!
ஆனாலும் இதுவரை
நேருக்கு நேர்
சந்தித்துக்கொண்ட தில்லை .!
சேர்ந்து அழுபவர்கள்,
சேர்ந்தே பார்ப்பவர்கள் ,
சேர்ந்தே வாழ்பவர்கள் ,
ஆனாலும் சேர்ந்து
ஒருகூட்டுக் கிளியாக
ஒருபோதும்
வசிப்ப தில்லை ..!
இடையே நாசித்துவாரத்தின்
குறுக்கீடு ..!
கண்டதையும் பார்ப்பவர்கள்,
காதலை யாப்பவர்கள் ,
ஓதலை செய்பவர்கள்,
வண்ணங்களைப் பிரித்து
எண்ணங்களுக்கு கொடுப்பவர்கள்,
நிறபிரிகையோ நிஜபிரிகையோ
உறவின் பிரிகையோ
உண்மையின் வருகையோ
உவகையின் வருகையோ
எல்லா நேரத்திலும்
ஒன்னா -துன்பத்துடனும்
இன்பத்துடனும் இணைந்தே
பிறக்கும் அகத்தின் குறி ஈடு.!
முகத்தில் தெரிந்து விடும்.!