கண்களைத் திற
சீறிப் பாயும் வேங்கையைக்கூட
வளைத்து பிடித்து சுற்றி, இருக்கியே
மூச்சினைப் பறித்திடும் மலைப்பாம்பு.
உன் காதல்க் கவிதை வரிகளினுள்
சிக்கித் தவிக்கிறேன் நானும்
வேறு வழியறியமுடியாமல்,
உயிரைப் பறிக்கவில்லை நீ
என்பதுமட்டுமே உத்திரவாதம்.
கண்களைக் கட்டிக்கொண்டே
கைகளை விட மறுக்கும்
உன் குறும்பு என்னை
மகிழவே வைக்கின்றது.