சர்வதேச சித்திரவதைகுள்ளானவர்கள் ஆதரவு தினம் (26/06/2011)

உலகிலேயே ஒரு நாடு
உண்மையிலேயே கண்கள் ஏற்றுமதியில்
முன்னிலை வகிப்பதென்றால்
முதலில் நீங்கள் சிந்தியுங்கள் ?

ஒத்த பிள்ளை பெற்றெடுத்தால்
உங்களுக்கு தெரிந்திருக்கும்
பல பிள்ளைகள் பெற்றெடுத்தால்
பாசம் இப்படி புரிந்திருக்கும்


தம்பியும் தங்கையுமாக
தங்களுக்குள்ளே உறவுகளாய்
அக்காளும் அண்ணனுமாக
அது போன்ற பிற உறவுகளும்
குடும்பமும் சொந்தமுமாக
கூடியிருந்தவர்களெல்லாம் இன்று
அநாதையென்ற அடைமொழியுடன்
அடைக்கப்பட்ட அவலத்தை என்ன சொல்ல ?

சுவர் வைத்து வீடுகட்டி
சுற்றிலும்கூட மதிலெழுப்பி
சன்னல்கள் வைத்திருந்தாலும்
சாத்திகொள்ளும் கதவிருக்க
பாதுகாப்பாய் வாழ்ந்திருந்து
பயங்கொண்ட ஊதியத்தில்
சுயநலத்தில் வாழ்கிறார்கள் என்றால்
சுருக்கென்றுதான் கோபம் வரும்.

கருவிலிருக்கும் சிசுக்கள் முதல்
கைக்குழந்தைகள் முப்பதாயிரம்
கொன்றுபோட்ட அத்தனை உயிர்களும்
குறை சொல்ல கூட தடையிருக்க
பத்திரிகை சுதந்திரம் கூட
பறிக்கப்பட்ட அநியாயம் சொல்கிறது
கைதூக்கி சரணடைந்தவர்களும்
சாட்சியாக இருந்துவிடுவார்கள் என்று
வெள்ளை கொடிகள் தூக்கியபோதும்
வெட்கம்கெட்ட சிங்களத்தான்
சுட்டோழித்த வஞ்சனைக்கெல்லாம்
சுதம்திரம்தான் ஒரே வழி ?

இராணுவத்தின் வக்கிரங்களுக்கெல்லாம்
இரத்தத்தை குடித்த பின்னும்
பிணம் மீதும் உறவு கொண்டு
பெருமை சொன்ன நரிகூட்டத்திற்கு
தேரர்களே மகிழ்ச்சி கொண்டாட
தெரியுமா என் சொந்தங்களுக்கு ?
பிழைத்த பின்னும் மானமாய் வாழ
பெண்கலென்றாலும் குடும்ப கட்டுபாடாம்
ஆண்கலென்றாலும் அங்கமிழந்தாலும்
அறுவை சிகிச்சை செய்த போதும்
எப்படித்தான் தமிழன் பிறப்பான்
இறைவனுக்கே இது புதிர்தான் ?

வல்லரசு உதவிக்கெல்லாம்
வளைத்து நிற்கும் கடலுக்குள்ளே
இலங்கையென்றால் முக்கிய கேந்திரமாய்
இராணுவத்திற்கு இருக்கட்டுமென்று
கைமாறாய் ஊக்கம் கொடுத்த பின்னும்
கண்டுகொள்ளாத இலங்கையினால்
உதாசீன படுத்திய உத்வேகத்தில்
ஒரேயொரு தீர்மானம் கொண்டுவந்தாலும்
பொருளாதார தடைகளுமில்லை
புரிந்து கொள்ள சட்டமுமில்லை
உலக வங்கியின் நிதிதவிக்குகூட
ஒப்புக்காக கூட ஒரு தீர்வும் இல்லை

தீக்குளித்து மரதமிழனாய் எரிந்தபின்னும்
தினம் தோறும் புகையில்லாமல் போனதால்
அடங்கிப்போன உணர்வுகள் எத்தனையோ
அழுமுன்னே ஆவியாகிவிடுகிறதே
கண்ணீரும் இரத்தமுமாக
கவிதையில் கூட எழுத முடியாமல்
எழுத்தில் கூட முள்வேலியிட்டு
என்னையும் அடைத்துவிடுவார்களாம்
அதனாலென்ன எழுதாமல் போவேனோ
ஆன்மா என்ன அடக்கும் பொருளா ?

எதிரிக்கு எதிரியாக இருப்பதுதான்
இலங்கையிலே இருக்க முடியும்
ஈழத்தையும் இலங்கையையும்
இணைப்பதற்கு இனியும் முடியாத போது
கோழிதுடைகள் கடித்து குதறி
குடிப்பதற்கும் அச்சமில்லாமல்
ஆடுமாடுகள் அடித்தது தின்று
அப்படியாவது இரத்தம் குடித்து
பெண்ணின்பம் எதுவென்று
பிணம்மீதும் உறவு கொள்ள
சாத்வீக குணமழித்து
சத்திரியனாக வலம் வரத்தான்
சந்தர்ப்பம் வரும் போலிருக்கு
சாவதற்கும் இதுதான் முடிவோ ?

ஆத்திரமாய் இருக்கிறது
அப்படியும் நடக்கலாம்தான்
நாளைக்கு தமிழனென்றால்
நம்வீட்டில் தீபமேற்றி
சித்திரவதைக்குட்பட்டவர்களுக்கு
சிறுதுளி மௌன அஞ்சலியாய்
யாராவது செய்வார்களா ?
எனக்கு அதில் நம்பிக்க கொஞ்சம்
எழுத்தில் கவிதை படித்த பின்னும்
இரக்கமற்ற மனித தன்மை
பிறந்துவிட்டால் சுதந்திரம்தான்
பிழைத்திருக்கலாம் தமிழனாக

தமிழனாக இருந்த பின்னே
தரணியெங்கும் சித்திரவதைகளை
எகிப்து, பாலஸ்தீனம், எரித்திரியா
ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும்பிற நாடுகளில்
ஆதரவு கொடுத்து அமைதி பெற முன்னிற்க
அடுத்துவரும் ஆண்டிலாவது அவலம் நீங்கி
அமைதிக்கு வழி கிடைத்தால் அப்புறமென்ன
சர்வதேச சித்திரவதைகுள்ளனவர்கள் ஆதரவு தினத்தை
சரித்திரத்தில் வேறொன்றாய் மாற்றி அமைப்போம்





எழுதியவர் : . ' .கவி (25-Jun-11, 4:08 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 321

மேலே