சிரிப்பு மாமு சிரிப்பு 03
கோட்டு சூட்டில்நீ வெள்ளைக்காரண்டா!
பாண்ட் சட்டையில் சூப்பர் ஹீரோடா!
வேட்டி துண்டில் புது மாப்பிள்ளைடா!
உனக்கு சூப்பர் டிரஸ்ஸிங்சென்ஸ் மாப்ளே!
ஆனா, ஒரு சந்தேகம்…போட்டிருக்கிற பனியனாவது உன்னுதாடா?
———————————————-
முகப்பருவுக்குத் துளசிச்சாறு..முடி வளர செம்பருத்தித் தைலம்..புருவத்துக்கு விளக்கெண்ணெய்..என எனக்காக எஸ்.எம்.எஸ்.மூலம் டிப்ஸ் மழையே பொழிகிறாய்!
உனக்காக நானும் தேடித் திண்டாடிக்கண்டுபிடித்த டிப்ஸ்| வாய்துர் நாற்றத்துக்கு வேப்பிலை துவையல்!
———————————————-
நண்பா, ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் என்ற அளவில் தண்ணீர் ஊற்று… குக்கரில் மூன்று விசில் சத்தம் வந்ததும் கேஸ் ஸ்டவ்வை ஆஃப் செய்துவிடு… Wish you a happy married life!
——————————————
மேகங்கள் திரண்டு வருவது பிடிக்கும்…அப்போது எழும் மண்வாசனை பிடிக்கும்… அடைமழை பிடிக்கும்… ஆலங்கட்டி மழை பிடிக்கும்… ஆனா, எனக்குச் சாரல் மட்டும் பிடிக்காதுடா…கொஞ்சம் தள்ளி நின்னே பேசு!
————————————————-
21-G பஸ் பயணத்தில்உனக்கு டிக்கெட் வாங்க | நீதந்த சில்லறையை வாங்கும்போது எதேச்சையாக நிகழ்ந்த உந்தன்சுண்டுவிரல் நகத்தீண்டலில்நான் உயிர் துடித்துப்போனேன்! அடச்சீ… இவ்வளவு கூர்மையாகவா நகம் வளர்ப்பார்கள்? முதலில் அதை வெட்டித்தொலை!
————————————————
ஞானிகளுக்கும் உனக்கும் சின்ன வித்தியாசம்தாண்டா… அவர்கள் போகும் இடம் சந்தோஷமா இருக்கும். நீ விடைபெற்றுப் போகும் இடம் சந்தோஷமா இருக்கும்!
———————————————
மானத்தில் நீ கவரிமான்..
நன்றியில் நீ நாய்..
தந்திரத்தில் நீ நரி..
கம்பீரத்தில் நீ யானை..
வேகத்தில் நீ முயல்..
ஒற்றுமையில் நீ காகம்…
ஆக, மொத்தத்தில்
நீ மனுஷனே இல்லைடா!
——————————————-
நண்பா, உன்னுடைய உதவி மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறது. ஹாஸ்பிடலில் குளோரோஃபார்ம் (மயக்கமருந்து) தீர்ந்துவிட்டது. உன்னுடைய சாக்ஸை உடனே அனுப்பிவை!
——————————–
நேத்து உன்னையும் உன் தம்பியையும் ஸ்பென்ஸர்ல பார்த்தேன். நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது! பின்னே… ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தா அதிர்ஷ்டம் அடிக்குமாமே!
——————————————
நேத்து உன்னைப் பார்க்க உன் ரூமுக்கு வந்தேன். நல்ல வெயில் நேரம். ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்துத் தூங்கிட்டிருந்தே. சரி, சரி… புரியுது! எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே..!
————————–
நண்பா.. நீ என்னை ஊருக்கு வழியனுப்ப வந்த நாளை என்னால மறக்கமுடியாதுடா! கட்டிப்பிடித்து, முதுகைத் தட்டிக்கொடுத்து ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி, படுபாவி என்னோட பர்ஸை அடிச்சிட்டியேடா!
……………………………….
அன்பான உன் ஆலோசனைக்கு நன்றி! அதுசரி.. முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான்!
…………………………………….
புதுபாண்ட்..புது சட்டை.. புது செல்போன்.. கலக்குறே கணேசா! பிரமாதம்!
ஆமா.. எல்லாம் எங்கேடா சுட்டே?!
…………………………………….
என்னைவிட்டு நீ ரொம்பத் தூரம் போயிட்டாலும், என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும், போன்கூடப் பண்ணலைன்னாலும், எத்தனை வருஷமானாலும் சரி.. மறக்க முடியுமா உன்னை? சரியான குரங்கு மூஞ்சி!
………………………………………
நான் சூரியன்… நீ நிலா! நிலா சூரியன்கிட்டேர்ந்து வெளிச்சத்தை வாங்கும். நீ என்கிட்டேயிருந்து பணம் வாங்குவே! ஆனா, ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!
……………………………….
அன்பே, ஹாப்பி பர்த்டே டு யூ! நீ எப்பவும் இதே பதினைந்து வயதில் இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன். ஏன்னா குட்டியா இருந்தாதான் கழுதைக்கு அழகு!
……………………………………………..
நண்பா, அவசரமாக உன்னைப் பார்க்கணும். செல்போனுக்கு அழைத்தேன். ‘ஸ்விட்சுடு ஆஃப்’ என்றது! மெஸேஜ் கொடுத்தேன்… ‘பெண்டிங்’. என்ன செய்வது? நகரில் அன்னதானம் எங்கே நடக்கிறது என்று விசாரித்துக்கொண்டிருக்கிறேன்!
………………………………………………
வித்தவுட் விசுவநாதா..! நீண்ட இடைவெளிக்குப் பிறகு வானிலை அறிவிப்புகளையெல்லாம் பொய்யாக்கி நேற்று நம் ஏரியாவில் செம மழை பெஞ்சுதே.. என்னடா ஆச்சு? நேற்று நீ பஸ்ல டிக்கெட் எடுத்திட்டியா?
===========================================================
நன்றி:- ஆ.வி