சிரிப்பு மாமு சிரிப்பு 02
‘‘நண்பா… நேத்து அவசர வேலையா நான் வெளியே கிளம்பும்போது நீ வந்துட்டே! வேறவழியில்லாம நான் வீட்லயே இருக்க வேண்டியதாப் போச்சு… ராகுகாலம் வந்தால் வெளியே கிளம்பக்கூடாதாமே…!’’
————————————————————————————————————————-
‘‘‘சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப் பேராண்டி’னு உன்னைப் பார்த்து, உன் பாட்டி பாடினாங்களாமே! ஏண்டா வீட்டுக்குப் போகும்போது தவழ்ந்து போற அளவுக்கா தண்ணியடிச்சிருந்தே?!’’
————————————————————————————————————————-
‘‘கழுத்துலதங்கச் சங்கிலிபோட்டுக்கிட்டு கலக்குறே மச்சான்.. சங்கிலியும் கழுத்துமா உன்னை பார்க்கறப்ப எங்க வீட்டு டாமி ஞாபகம்தான் வருது!
————————————————————————————————————————-
‘‘நண்பா! ‘என் ஃபுல்சப்போர்ட்டும் உனக்குத்தான்… என் ஃபுல்சப்போர்ட்டும் உனக்குத்தான்’னு சொல்லிட்டு, கடைசியில எனக்கு வெச்சிருந்த என் ஃபுல் சாப்பாட்டையும் சேர்த்து ஒரு கட்டுக் கட்டிட்டியேடா!’’
————————————————————————————————————————-
‘‘நட்புங்கிறது ஒயின் மாதிரிடா… அது பழசாக ஆக ஸ்வீட்டாகிட்டே இருக்கும்.. உன்னையும் என்னையும் போல! நீ பழசாயிட்டே இருக்கே! நான் ஸ்வீட் ஆயிட்டே இருக்கேன்!’’
————————————————————————————————————————-
‘‘உனக்குத் தெரியுமா? கடலைவிட காதல் ஆழமானது. ஆனா ‘கடலை’ காதலை விட ஆழமானது!
————————————————————————————————————————-
‘‘நண்பா! இன்னிக்கு ஒருத்தர், ‘உன் நண்பனைச் சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ அப்படின்னாரு! உன் பேரைச் சொன்னேன்… காறித் துப்பிட்டுப் போயிட்டாரு!’
————————————————————————————————————————-
இரண்டு ஆண்யானைகள் பேசிக்கொண்டு நின்றிருந்தன. அப்போது ஒரு பெண் யானை அவற்றைக் கடந்து சென்றது. ஒரு ஆண்யானை, மற்றொரு யானையிடம் சொன்னது| ‘‘பியூட்டிஃபுல்… 3600, 2800.. 3600!’’
————————————————————————————————————————-
‘‘மாப்ளே! நேத்து உன்னோட பழைய காதலியை பஸ்ல பார்த்தேண்டா…இப்பவும் உன் நினைப்புதான் அவளுக்கு. வேண்டாம்டா… இது தப்புடா.. அவகிட்ட வாங்கின ஐந்நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துடுடா. கெட்ட வார்த்தையிலயே உன்னைத் திட்டறாடா!’’
————————————————————————————————————————-
‘‘நீ ரொம்ப அழகாயிருக்கேனு நான் நினைக்கல. நான் உன்னைக் காதலிக்கல. ஆனா, ஏதாவது ஏடாகூடமா நடந்துடுமோனு பயமாயிருக்கு. உன் மூஞ்சியப் பேக்கறதுக்குள்ள ஓடிப்போயிடு!’’
————————————————————————————————————————-
‘‘பங்காளி, நான் துண்டைக் கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்.. துண்டைக் கழுத்தில் போட்டா ஊருக்குப் போறேன்னு அர்த்தம்.. துண்டை இடுப்பில் கட்டினா கோயிலுக்குப் போறேன்னு அர்த்தம்.. துண்டைத் தலையில் போட்டா கடன் கேக்கறேன்னு அர்த்தம்!’’
————————————————————————————————————————-
‘‘டேய்! நீ சிரிச்சா ரஜினி..பேசினா வைரமுத்து..ஆடினா பிரபுதேவா..பாடினா ஜேசுதாஸ்..படுத்தா உசிலைமணி..வெயிட்டை குறைடா மாப்ளே!’’
————————————————————————————————————————-
‘‘மச்சான்! நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான், ஒப்புக்கறேன். நீ புறநானூறைப் படிச்சு முடிச்சவன்தான், ஒப்புக்கறேன். ஆனா, என்னோட பணம் நானூறை முழுங்கி ஏப்பம் விட்டுட்டியேடா…நீ நல்லா இருப்பியா?’’
————————————————————————————————————————-
‘‘எங்கு சென்றாலும்புதிதாய் என்ன செய்தாலும்உன் குரலைக் கேட்டுவிட்டேஎதுவும் செய்ய விரும்புகிறேன். கழுதை கத்தினால் நல்ல சகுனமாமே!’’
————————————————————————————————————————-
நன்றி:- ஆ.வி