வெற்றி

வெற்றி:
"""""""""""""""""""""""
"இந்த ஆண்டு டர்ன்ஓவர் மட்டும்
ஐந்து கோடி... லாபம் ஒரு கோடி..
என்னோட எல்லா மூவ்மன்ட்டும்
வெற்றிதான்.. என் வெற்றிய யாரும்
தடைபோட முடியாது" என்று
பெருமையாக, ஆனந்தம் பொங்க தன்
மனைவி பூங்குழலியிடம்
சொல்லிகொண்டிருந்த சஞ்சய், ஒர்
ஓரமாக சோகமாக அமர்ந்திருந்த தன்
செல்ல மகள் 'சைந்தவி' யை
பார்த்துவிட்டான்.
அடர்ந்த பனியில் மிளிராத மலர்
முகத்தோடு ஏதோ ஒரு சிந்தனையில்
சைந்தவி தன்னிலை கடந்த
சிந்தனையில் இருந்தாள். 'என்னடா..
செல்லம்' என்ற சஞ்சையின்
கெஞ்சலுக்குப் பிறகே.. தன் இதழ்
திறந்து 'அப்பா..இன்று பள்ளியில்
ஓட்ட போட்டி.. நான் எங்கே விழுந்து
விடுவேனோ.! காயம்படுமோ.! என
பயந்து நீங்கள் என்னை தடுத்ததால்..
நான் பங்கேற்கவில்லை. ஒருவேளை
நீங்கள் அனுமதி தந்து நானும் வெற்றி
பெற்றிருந்தால்.. நானும் உங்களைப்
போல் வெற்றியின் மகிழ்வை
உணர்ந்திருப்பேன்.. நீங்களும் என்னோடு
என் வெற்றியை கொண்டாடி
இருப்பீர்கள்.. இல்லையா அப்பா'
என்றதும் சற்றே தடுமாறிப் போன
சஞ்சையின் மனமோ.. தடுமாறாமல்
சிந்திக்க தொடங்கியது 'நம்மை மட்டுமே
மகிழ்விக்கும் வெற்றி முழமையான
வெற்றியாகாது' என்று..

எழுதியவர் : moorthi (7-Aug-16, 3:54 pm)
Tanglish : vettri
பார்வை : 508

மேலே