சத்தம் போடாதே

மாமா
(கையை நீட்டி)
கட்டிபிடிச்சிக்கோ.....
(வாய் சும்மா தான இருக்கு)
முத்தம் கொடு(வை)


தும் துதும் தும்
தும் துதும் தும்
தும்

#**என்ன இது தாளம் (Rhythm)
இரகசியம்
சொல்லும் போது
இப்படித்தான்
Background Music வரும்**#

அவன் (என்னவன்)
அவளின்(என்)
வயிற்றை
வருடி(தடவி) கொடுத்து
முத்தமிட்டான்.

இதற்கு
எதற்கு
Background Music னு
கேக்கறன் ?

இவள்
அவனின் தோளில்
ஓர் இலை போல் சரிந்தாள்.....
(சாய்ந்தாள்)
அவன் இவளின்
மார்பில் தூங்கினான்...
இவள்(நான்)
அவனை (என்னவனை)
கட்டிக்கொள்ள
(கட்டிக்கொண்டேன்)

பீப்.....

ஏன் இங்கே
பீப்

இரு உயிர்கள்
கட்டிக்கொண்டு தூங்குகிறது...

(எதுவும் எழுப்பிவிடக் கூடாது என்று
பின்னணி இசையில்
வீணையின் நரம்பை
இழுத்து கட்டினேன்)

நீங்கள்
நினைப்பது போல்
நாகரீகமற்ற செயல்
எதுவும் இல்லை

நாகரீகம் இல்லாமல்
நடந்து கொள்ள
நாங்கள் என்ன நாயா?...

தணிக்கை (Sensor Cut)
செய்வோரும்
அரசியலுக்கு ஏற்றார்
போல்
இயங்குவார்கள்
அது யாருக்கு தான்
தெரியாது

என் பிள்ளையை
மண்ணில் புதைப்பார்கள்
அவள் தாய்
மண்ணை
அவர்கள்
எங்கே புதைப்பார்கள்
(திரைப்படம்: உச்சிதனை முகர்ந்தால்)

இதில் என்ன தவறை
பிழையை கண்டார்கள்
(அப்பொழுதும்
எப்பொழுதும்)

நல்லவையை
மறைப்பதும்
தீமையின்
வெளிப்பாடே

இதில் இருந்து
என்ன தெரிகிறது
யார் எப்படி நடந்தால்
எனக்கு (நமக்கு) என்ன?
யார் அழுதால்
நமக்கு என்ன
யாருக்கு என்ன
நடந்தால் நமக்கு என்ன
நமக்கு
தேவையானது
நமக்கு கிடைக்கிறது
நான் நன்றாய்
இருக்கிறேன்
வேறு என்ன வேண்டும்...
ஏதோ கத்திக்
கொண்டிருக்கிறது
காது வலிக்கிறது
தூரம் போய் கத்து
போ இங்க நிக்காத.

பாக்கறதுக்கு
பைத்தியம் மாதிரியே இருக்கு.....
கிட்ட போகாத...

அங்க பாருங்க
உரிமைக்கு போராட்றன்னு
லூசு மாதிரி
இந்த வெயில்ல
வெந்து சாகுதுங்க

இதுங்கலான்
திருந்தவே திருந்தாது

(உரிமைக்காக
போராடுபவர்களை
ஆதரிப்பீர்...
அவர்கள்
ஒன்றும்
வெத்து வேட்டிகள்
அல்ல
உன்னையும்
என்னையும்
விட நல்ல மனம் படைத்தவர்கள்...

உன் உரிமை
மறுக்கப்படும் போது தான்
அவர்களின் கதறல்
உனக்கு கேட்கும்

நாளை
உனக்கும்
இப்படி ஒரு
நிலை வரும்(வரலாம்)

அப்பொழுது
உனக்காக
யார் வந்து நிற்பார்

நீ எப்படி
நடந்து கொள்கிறாயோ
அப்படியே
உலகமும்
உன்னிடம்
நடந்து கொள்ளும்

ஆதலால் அன்பை பொழி

எதுவும் நிரந்தரமில்லா
உலகம் ஐயா இது...
அடுத்த நொடி இருப்போமா
இருக்கமாட்டோமா
என்பதே தெரியாது
இதில் ஏன் இவ்வளவு ஆட்டம்

ஆட்டம் அடங்கிவிட்டால்
ஆறடி நிலம் தான் மிச்சம்
இன்று அது கூட கிடையாது
மின்சார தகன மேடையில்
படுக்கவைத்து
ஒரு சொம்பில் அஸ்தி எனும் பெயரில்
அடைத்துவிடுவார்கள்

பொறுங்கள்
அது கூட
நிலை இல்லை
நீரில் கரைத்து
நமை முழுவதும்
கரைத்திடுவார்கள்

தூசி கூட
நமக்கு மேலானது

இப்படி ஒருவன்
இருந்தான்
என்பதற்கு
உன் பணமோ
உன் உடலோ சான்றாகாது

உன் உயிர் கொண்ட மனமே
மற்றவர் நெஞ்சில்
நீ நிலைக்கவும்
நிறையவும் காரணம்

நீ யார் என்பதை
நீ தான்
உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்

உன் உடல்
போனாலும்
புகழுடம்பு போகாது
என்பது போல் வாழு

சிறு தூசி என்றாலும்
சிறுக சிறுக
சேர்ந்தால் அணு

உன் நல்ல எண்ணங்களால்
உன்னால் முடிந்ததை
உனக்கும் மக்களிற்கும்
செய்
சிறு துரும்பிலும் நீ வாழ்வாய்
நீ மண்ணில் புதைந்தாலும்
மக்களின் மனங்களில்
என்றுமே
வேரூன்றி வாழ்வாய்)


உண்மையா!
அங்க
என்ன நடந்தது
தெரியுமா?

அவர் எனை
கட்டியணைத்து
முத்தமிட்டார்
நான் அவர்
மடியில்
படுத்துக்கொண்டேன்.
அவர் எனை தட்டிக்கொடுத்து
தூங்கவைத்தார்...
பின்
என்னோடு
சேர்ந்து
என்னை
கட்டிக் கொண்டே
தூங்கிவிட்டார்...

நான் (நாம்)
துண்டிக்காவிட்டால்
(ரகசியம் காக்காவிட்டால்)
அவர்களே
துண்டித்திருப்பார்கள்
ஈழத்தின்
அடையாளம்
சொந்த மண்ணில்
பிறப்பதை பிடிக்காமல்

நாங்கள்
மகிழ்ச்சியாய்
இருப்பதை பார்த்து
பொறாமையினால்
என்னை
இங்கேயும்
அவரை
அங்கேயும்
பிரிக்க முற்படுவார்கள்

முடியுமா
அது அவர்களால்?!

அவர் எங்கேயோ
நான் அங்கேயே.....

தலைவன் எவ்வழியோ
தலைவி அவ்வழியே.....

அவர் போராளி என்றால்
நானும் போராளி

அவர் கைதி
என்றால்
நானும் கைதி

அவருக்கு
தூக்குக் கயிறு
என்றால்
எனக்கும்
தூக்குக் கயிறு
காத்துக் கொண்டிருக்கிறது

அவருக்கு
முள் பாதை (பஞ்சு மெத்தை)
என்றால்
எனக்கு அது
பஞ்சு மெத்தை

அவர் பாடையில்
என்றால்
நான் அந்த
பாடையில்
அவரோடு
படுத்திருக்கிறேன்

அவர் பிணம்
என்றால்
நானும்
பிணம் என்பேன்
அவரை அணைத்துக்கொண்டே
சென்றிடுவேன்
சுடுகாடு

என்னை அவர்
கட்டிக்கொண்டதில் இருந்து
சுடுகாடு வரை
அதற்கு மேலேயும்
நான் அவரை கட்டிக்கொண்டே சென்றிடுவேன்
வெற்றி தோல்வி
இரண்டையும்
பங்கு போட்டுக்கொள்வோம்
இன்பதுன்பம்
இரண்டையும்
பங்கு போட்டுக்கொள்வோம்
உயிரை
பங்கு
போட்டுக்கொள்வோம்
உடலையும்
பங்கு
போட்டுக்கொள்வோம்
சாவையும்
பங்கு
போட்டுக்கொள்வோம்

காற்றாகி வாழ்வோம்
இசையாகி வாழ்வோம்
மொழியாகி வாழ்வோம்
ஐம்பூதமாய் வாழ்வோம்
உயிரின் உயிராய் நாம் வாழ்வோம்
எங்கும் எதிலும் நாமாகி வாழ்வோம்


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Aug-16, 6:38 pm)
Tanglish : sattham podaathe
பார்வை : 190

மேலே