காதலா நட்பா
நான் வாடிய போதெல்லாம்
உன் புன்னகையால்
தன்னம்பிக்கையை கொடுத்தாய்...
நான் உன்னை தேடிய பொது
நீ தென்பட வில்லை
காலம் கடந்த பின்
என் முன் தோன்றினாய்...
நான் நேசித்த போது
காமம் என்று திட்டியது
உலகம்...
இன்பம் என்னை சூழ்ந்த போது
பிறர் கண் சிவந்தது பொறாமையில்
இது என்ன உலகம்
என்று கவலைப்பட்டபோது
சிரித்தது இந்த உலகம்
தலையில் அடித்து கொண்டு...
நம் நட்பை குறை கூறியது
இந்த உலகம்...
ஏன்? நீ பெண் நான் ஆண்
என்பதாலோ?
உலகமே ஒன்றாக வந்து
வேண்டாம் என்று சொன்னாலும்
என் மனம் உன்னை நினைக்க
தவறுவதில்லை...
அறியா பருவம் தொடங்கி
இன்றும் கூட நீ பருகிய
பழச்சாறு எனக்கென ஒதுக்கி
பருகச் செய்தாய்...
என்னை ஈன்ற தாய்கூட
செய்ய தயங்கிய ஒன்றை
அன்றே என் மனம்
உன் மனதோடு ஐக்கியம்
ஆனது...
இது காதலா? நட்பா?