இது சரியோ

பிணம் போகும் பாதையிலே
மலர் தூவும் மனிதர்கள்...
இனமறியாது...
குணம் போதுமென்று...
இருமனம் இணைந்து
ஒத்து வாழ நினைக்கையில்...
மலர் கொடுத்து
மனம் மலர வாழ்த்திட
மறுப்பதிங்கு ஏனோ...?
காதலர்களை ...
தவறாக புரிந்து கொண்டது தானோ..?
சுயநலம் கொண்டு
அன்பில் இணைந்த மனங்களை
வாழ விடாமல்...
பிரித்துக் கொன்று...!
மலர் தூவி
மயாணத்திற்கு...
வழி அனுப்புவது
சரிதானோ...?
ஒருவர் சுதந்திரமாய்...
வாழ்வதற்கு வழிவகை செய்யாது...!
இனக் கெளரவத்திற்கு
கொலை செய்யும்
சாதியும் மதமும்...
மனிதனுக்கு தேவைதானோ...?