பொருளாதார கவிதை
எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!
வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!
^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்