குழந்தைச் செல்வம்
கள்ளம் கபடு அற்ற பார்வை.
தங்கு தடை இல்லாத,
அர்த்தம் புரியாத வார்த்தைகள்.
தெரிந்தவர், தெரியாதவர்
செய்யும் அசைவுகளை,
திருப்பிச் செய்யும் லாவகம்.
வாகன பயணத்தில்,
பார்க்கும் காட்சிகளுக்குத்
தன் நோக்கில் பெயரிடுதல்.
பசிக்கும், தூக்கத்திற்கும்,
தாய் மடி தேடி, சுகம் தேடல்.
இவையெல்லாம் குழந்தைகளின் சேட்டைகள்.
காலமெல்லாம் மாறாமல் மனதில் ,
நிற்கும் நினைவுகள்.