அப்பா

அப்பா

அப்பா..
உடல் கொடுத்தாய் உயிர் கொடுத்தாய்..
நீ உண்ணாமல்
எனக்கு உணவளித்தாய்..
அன்பை கொடுத்தாய் பண்பை கொடுத்தாய்..
நான் வாழ உன் வாழ்கையை
செலவழித்தாய்..
வழி கொடுத்தாய் வாழ்கை கொடுத்தாய்..
உன் நினைவை என் உதிரத்தில்
விதைத்துவிட்டாய்..
நான் மணலில் ஆடும் காலம் முதல்..
நீ என் மடி சாய்ந்த
காலம் வரை..
எனக்காய் இருந்தாய் எனக்காய் வாழ்ந்தாய்..
இன்று ஏனோ எனை பிரிந்துவிட்டாய்..
பணம் வேண்டாம் நீ பரிவோடு காட்டும்
பாசம் வேண்டும்..
தினமும் திகைக்காத
உன் திட்டல் வேண்டும்..
தோல்வியிலும் துவளாமல் துணிவை கொடுத்த
உன் கண்கள் வேண்டும்..
மனம் நொந்த வேளையிலே
என் தலை சாய உன் தோள்கள் வேண்டும்..
என் கால்களை உன் நெஞ்சிலிட்டு தூங்கிய
அந்த நாள் ஒன்று வேண்டுமையா..!!
💐💐அப்பா💐💐
அன்று என்னோடு நீ..
நேற்று உன்னோடு நான்..
நாளை என்றும்
உன் நினைவுகளோடு நான்..!!
அன்புடனும் ஏக்கங்களுடனும்
அன்பு மகன்..
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (12-Aug-16, 11:36 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : appa
பார்வை : 134

மேலே