எல்லாம் இனி நீயே

எல்லாம் இனி நீயே!
=============================================ருத்ரா

என்னை உற்று உற்று பார்த்தாய்
வழுக்கி வழுக்கி ஓடும் கெண்டை மீன்களா இவை?
என்ன இது? என் இப்படி?
பக்கத்தில் வந்து
நெருப்பை அள்ளிக்கொட்டினாய்
"உங்கள்கண்ணின் விழியில்
என் பிம்பம் மட்டுமே தான் விழுந்திருக்கும்
இது யாரோ புது பிம்பம்
யார் அது?"
உன் இடிக்குரலில் நம் இரண்டு இதயங்களும்
எதிரொலித்தது
எனக்கு நன்றாக கேட்டது.
இருப்பினும் என்ன இது புதுப்பிம்பம்?
நான் குழம்பினேன்.
அப்போது தான் அவள் தோழி
அருகிலேயே நிற்பது தெரிந்தது.
அந்த பிம்பம் அது தானா?
"ஏண்டி இவளே!
இவரது குறு குறுப்பார்வையில் தானே
மயங்கினேன்.
அதனால் தான் இதெல்லாம்.
நீ வா போகலாம்"
அவள் போய்விட்டாள் தோழியுடன்.
கச்சேரியெல்லாம் தனிமையில் தான்.
சரி தான் அன்பே!
நீ கண்ணால் என்னை
மொத்தமாய் விழுங்கிய பின்
வானம் எது ? பூமி எது?
எல்லாம் இனி நீயே!

=====================================

எழுதியவர் : ருத்ரா (12-Aug-16, 12:58 pm)
Tanglish : ellam ini neeye
பார்வை : 209

மேலே