இறந்து விடு

இதயத்தில் ஒரு இனம் புரியா வேதனை..
சொல்லவும் வார்த்தை இல்லை..
சோகமும் தீரவில்லை..
நெஞ்சுக்குள் நீ சொன்ன வார்த்தை
நெருஞ்சில் முள்ளாய் குத்தும் போது..
கண்களும் கலங்குதம்மா..
இதயமும் நொறுங்குதம்மா..
பதட்டத்தோடு பார்த்திருக்கிறேன்
பாவை உன் வார்த்தைகளை..
பதிலளிக்க வார்த்தை இல்லை..
பாசாங்காய் சொல்கிறது என் மனது..
"இறந்து விடு" என்று..!!
குட்டி..!!