குழந்தை விளையாட்டு

ஆசையாய் கட்டினான்
இடித்து சென்றது
மதிப்பெண்

மண் மீது மோகம்
குறையவே இல்லை
வியாபாரி

மாவும் சூடும் இல்லாமல்
தயாரானது இட்டிலி
விளையாட்டு

தாயிடம் கற்ற பாடம்
பங்கு போட்டு தந்தான்
குழந்தை

எழுதியவர் : பாண்டிய ராஜ் (13-Aug-16, 2:11 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
பார்வை : 665

மேலே