இரவு நட்சத்திரம்
வட்டிக்கு வாங்கியது
குறைந்து கொண்டே வந்து
நிலா
பிறை அழகை
பார்த்து சிறித்தது
குழந்தை
சூரியனை கண்டதும்
மறைந்து கொண்டது
இரவு
நிலாவின் பற்கள்
சிதறிகிடக்கிறது வானில்
நட்சத்திரம்
நேற்று விட்ட இடம்
மறந்து போனது
எண்ணிக்கை
நிலாவிடம் வாங்கியது
கடனாக வெளிச்சம்
நட்சத்திரம்
நீல வானம்
கருத்து போனது
இரவு