​சுகமான சுமையிது ​

​சுமைதனை
சுகமாக​
தாங்கிடும்
​வருங்கால
தலைவர்கள்
வளமான
இந்தியாவை
வலிவாக
காணவே
பொலிவாக
மாற்றவே
​வறுமை
நிலையிலும்
பொறுமை
காத்து
பொடிநடையாக
காலணியின்றி
காலுடன்
கற்றிடவே
பள்ளிக்கு
செல்லும்
காட்சியிது
விழிகளுக்கு
மாட்சியிது
வளர்ச்சிக்கு
சாட்சியிது

-----------------------
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Aug-16, 2:42 pm)
பார்வை : 189

மேலே