நெஞ்சு பொறுக்கவில்லை
இது நடந்திருக்க வாய்ப்பில்லை
நடந்திருக்குமேயானால்
இப்படி நடந்திருக்கவும் கூடாது
நடந்துவிட்டது
நூற்றாண்டு கழிந்து
நடக்கவேண்டியது...
கவிதை புத்தகத்தையல்ல
ஒரு கவிதை நூலகத்தையே
சூரையாடி சென்றுவிட்டது
கொடுங் காலம்!
எனது " காகிதக்கனவுகள்" கவிதை தொகுப்பிற்கு
மனம் உவந்து வாழ்த்துரை அளித்த
அமரர் நா. முத்துக்குமார் அவர்களுக்கு
எனது கண்ணீர் அஞ்சலி....