விருந்தோம்பல்
விருந்தினரை கண்டு
மனம் குளிரும் சமூகம்
மறைந்து
விரண்டோடும் சமூகமாக
மாறிக்கொண்டன இன்று
ஆடம்பரத்தில் கலந்த நாகரீகம்
அதிகரித்து
வீட்டிற்கு விருந்தாளி வந்தால்
தாழ்வு உயர்வு என
பிரித்துப் பார்க்கிறார்கள்
சொந்தம் இல்லையென்று
விரட்டுகிறார்கள்
அவர்கள் நன்றிகெட்டவர்
என்று முகம் கொடுத்து
பேச மறுக்கின்றனர்
தன்னிடம் இருந்தால்தானே
கொடுக்கலாம் என்று
தப்பிக்க பார்க்கிறார்கள்
அவ்வாறல்ல
உங்கள் குழந்தைக்கென
இருந்தாலும்க குழந்தையை
தாலாட்டுங்கள்
வருபவரை விருந்தோம்பி
அவன் வயிற்றோடு சேர்த்து
மனதையும் நிறப்பி
வழி அனுப்புங்கள் வாசற்படி வந்து
மாளிகை கட்டி
மாடு ஆடென அறுத்து
பழங்கள் பானங்கள் வைத்தே
கொடுப்பதல்ல விருந்தோம்பல்
தூய்மை நீரானாலும்
இருப்பதைக் கொண்டு
இனிமையான வார்த்தைகளை
சேர்த்து பரிமாறினாலே போதும்
விருந்தோம்பலை வியப்பிக்க
விருந்தினர் உங்கள் கவனிப்பை
குறை கூறுவாறென்று
உங்கள் அடிப்படை வாழ்க்கையை
இழந்து
உபசரிப்போடு உறவுகளையும்
சங்கடப்படுத்தி வெறுத்தால்
உங்கள் வம்சம் உங்களோடு
மறித்தே போய்விடும்
விருந்தோம்பளின் பிரதியுபகாரம்
வருபவரிடம் எதிர்பாராது
இறுதி நாளில் இறைவனிடம்
கிடைக்குமென எதிர்பார்த்து
சந்தோஷப்டுங்கள்