" எங்கள் நாடிது ; எங்கள் நாடிதுவே............! "

                    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்........!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳"  எங்கள் நாடிது ; எங்கள் நாடிதுவே......! "

எங்கள் நாடிது ; எங்கள் நாடிது 
              இந்திய நாடிதுவே....! நாடிதுவே............! 


சங்கடஞ்செய்திடும் அன்னியர்க்கும் அன்பைத்தந்தே 
               சொந்தக்களாக்கிய  சீர்மிகு நாடிதுவே..........! 
சங்கம்வைத்தே மொழிவளர்த்தாலும் மற்றமொழிகளுக்கு 
                 பங்கம் நினையா நாடிதுவே..........!

ஏர்பிடிக்கும் ஏழைகளெல்லாம்  உவந்தே கட்டிய 
               உத்தம காந்தி தேதமிதுவே.......! 
ஏளனஞ்செய்தவரும் மிரண்டுவே " அக்னி " ஏவுகணை 
              விண்ணில் செலுத்திய நாடிதுவே.......!

தஞ்சமென்று வந்தவர்க்கு தாராளமாய் தந்திடும்  
              தகைமை கொண்ட நாடிதுவே........! 
பஞ்சமென்ற பேச்சுக்கே இடமில்லை எனும்படி 
              விலையிலும் விளைவிலும் மலிந்ததென் நாடிதுவே.....!

நிந்தனை செய்தோரையும் வந்தனை செய்யும் 
                காந்தி வளர்த்த நாடிதுவே......! 
கைவலிக்க இராட்டைச்சுற்றி கதர் செய்திடும் 
                 நெசவாளர் நெய்திட்ட நேர்த்தியானநாடிதுவே.......! 


ஊறுசெய்யும் செறுநர்க்கும் உவந்தே நன்மை செய்தே 
                   பேறு பெற்ற  நாடிதுவே......! 
வெறிபிடிக்கச் செய்திடும் சாதி,மத,இனப் பிசாசையெல்லாம் 
             சவக்குழிக்குள் தள்ளிய புனிதர்வாழும்நாடிதுவே....................! 

இல்லறக்கிரிக்கெட்டில் கட்டிலறைக்கும் சமையலறைக்கும் ரன்கள்  

            எடுத்தெடுத்தே ரணமாகிப்போன பெண்களெல்லாம்

நாடாளும் வண்ணம் உயர்ந்து திகழ்ந்திடும் நாடிதுவே..........! 

              நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய நாடிதுவே.......! 

கலையும் கல்வியும் மேவிய வளர்நத நாடிதுவே...........! 

சுதேசிபிமானிகளின் இரத்தம் சொறிந்தே சுதந்திரப்பயிர் 
                  விளைச்சல் கண்ட நாடிதுவே.......! 

விஞ்ஞானம் மெய்ஞானமும் இரட்டைக்குழந்தையாய் 
                  ஈன்றெடுத்த நாடிதுவே........!

புரையோடிக்கொண்டிருக்கும் ஊழல் கிருமி அறுத்தெரிந்தே
            வல்லராசாகத் துடித்திடும் வளமிகு நாடிதுவே.........! 


சனியம்பிடிச்சகெளவரக்கொலைகள் , கழுத்தைஇறுக்கிடும்        

               வேலையில்லாத்திண்டாட்டமெனும் சவால்களை 

வென்றெடுத்துவளமிகுநாடக  திகழப்போகும்  நாடிதுவே.......! 


எங்கள் நாடிது எங்கள் நாடிதுவே.......! 
                      எல்லா வளங்களும் திறமைகளும் நிரம்பிய நாடிதுவே........!

" தம்பாஜி.......!"

எழுதியவர் : தம்பாஜி......! (15-Aug-16, 8:08 pm)
சேர்த்தது : தம்பாஜி
பார்வை : 65

மேலே