எழுந்து நில்
எழுந்து நில் ...
✍ :மருதுபாண்டியன். க
தமிழா இந்தியராய்
ஒருங்கிணைந்து எழுந்து நில் ...
உருவத்தில் தான் வேறுபாடு
நம் உள்ளத்தில் இல்லை -நண்பனே..
மாவீரர்கள்
பூலித்தேவன் தாக்கம் தான்
கட்டபொம்மன் வீரம் தான்
கட்டிமுத்தமிட்ட மரணம் தான் ..
அவர்கள் வீசிய வாள் வன்முறையின் முழக்கமல்ல
நம் மக்களை காத்திடும் நோக்கம் மக்கா -
தமிழா இந்தியராய்
ஒருங்கிணைந்து எழுந்து நில் ...
தஞ்சை கோவில் அதிசயத்தில் பல வகையாம்
உலக அரங்கில் கத்தி உரைத்திடு ...
சாதிகள் வேண்டாம்
பெண்ணடிமை வேண்டாம்
ஒற்றுமைக்காண பாரதியின் குரல் கேட்டு ...
அண்ணல் அம்பேத்காரின் திட்டம் போற்றிட வேண்டாமா?
இந்தியனாய் எழுந்து நில் தமிழா ...
திருப்பூரின் திருக்குமரன் கொடிகாத்த கதையினை
செக்கிழுத்த செம்மலின் முழக்கத்தை காற்றில் பரப்பிவிட வேண்டாமா...
சொத்தும் வேண்டாம்
சுகமும் வேண்டாம் - மக்களே போதும் என்றார்
எண்ணத்திலும்
பசும்பொன்னார் ..
அவருடன் கைகோர்த்து
எழுந்து நில் - தமிழா
இந்தியனாய் ...
ஜான்சி ராணிதேவி கதைக்கேட்டால்
சரித்திரமெல்லாம் நடுங்கிடுதே ...
கோதைநாயகிஅம்மாள் எழுத்தெல்லாம்
வெள்ளையனை சுட்டுதுரத்தியதே ..
ஒற்றுமை காத்திட
தீண்டாமை களைந்திட
நரிகள் தந்திரம் விரட்டிட
பெற்ற சுதந்திரம் காத்திட
தமிழனின் முழக்கம் இந்தியர்களின் ஒற்றுமை...
வேண்டாம் வன்முறை
அதுவே நம் தலைமுறை ..
பேணி காப்போம் நம் சுதந்திரம்
சுபாசாரின் எழுச்சியாக
காந்திஅண்ணலின் அகிம்சையாக
எழுந்து நில் தமிழா
இந்தியராய் ...