அவள்

அவள் போகும்
பாதையெங்கும்
எழுதி இருந்தது
மதி மயங்கும் சாலை
சற்று கவனம் தேவையென்று ...

கடற்கரை பக்கம்
அவள் நடந்தால்
அழகு புயல் அபாயம்
அறிக்கை கண்டேன்
இளைஞர்கள் கவனத்திற்கு .....

அவள் வீட்டு
பக்கம் நானும்
சென்றேன்
பெயர் பலகை
கண்டேன்
மயில்கள் வாழும் பகுதியென்று ....

அவள் பார்வை
கண்டு
நானும் எழுதினேன்
சொர்க்க வாசல் திறப்பு
விழா என்று ......

எழுதியவர் : கிரிஜா.தி (17-Aug-16, 1:03 pm)
Tanglish : aval
பார்வை : 130

மேலே