எழுத்து

எழுத்து என்பது
என் சுயரூபம் அல்ல
என் திமிறின அடையாளம்
அல்ல...
என் மனத்தின் கோலம்
அல்ல...

எழுத்து என்பது
என் சோகங்களின்
சிதறல்..
தாங்கமுடியா சுமைகளின்
குமுறல்...
நம்பிக்கையின் ஆரவார
ஓசை..

எழுத்து என்பது
என்னவனுக்கு மட்டும்
மார்பை கிழிக்கும்
அம்பாய் தெரிவது
ஏனென நெஞ்சம்
திக்கித் திணறுகிறது...

எழுத்து என்பது
என்னவனே...
சிந்தனையின் ஓர்
வடிவம்...
கற்பனையின் ஓர்
விம்பம்...
அதைப்புரிந்தால் நீயும்
ஓர் படைப்பாளி!..

எழுதியவர் : பச்சைபனிமலர் (18-Aug-16, 1:42 pm)
Tanglish : eluthu
பார்வை : 55

மேலே