அண்ணனும் உன்னால் தாய் மாமனும் உன்னால்
அண்ணணும் உன்னால்
தாய் மாமனும் உன்னால்........
ஒன்ன கூடி வளந்தோமே
தங்கம்
பள்ளிக் கூடம் போகும் போது
மிட்டாய் வாங்கித் தர
நீ
அழுததும்
கை பிடிச்சி
நடந்து
ஒன்னா நடக்கையிலும்
சந்தோஷமா
இருந்தோமே
தங்கம்
சமைக்க தெரியலனாலும்
அண்ணனுக்கு
சமைச்சி நீ போட்டதும்
அப்பாவிடம் அடி வாங்கையில
அனைத்து
ஆறுதல் சொன்னதும்
செல்லமாய் நீ திட்டயிலும்
தலையில்
நீ கொட்டயிலும்
சொர்கமாய் இருந்ததே தங்கம்
என் காதலை
உன்னிடம்
நா சொல்லி
வெட்கப்படயிலே
அண்ணியானு
கேட்டு
கிண்டலடித்ததும்
இந்த
சுகத்திற்கே
காதல்
பன்ன
தோனுமே
தங்கம்
கஸ்டம்
தெரியாமல்
போனதே
தங்கம்
நீ
இல்லத்தில்
இருந்ததால்
நீ
வாக்கப்பட்டு
போரப்போ
என்
உசுரையும்
கொண்டு
போரியே
தங்கம்
யாரையும் அழமா பாத்துக்கிட்டியே
தங்கம்
இப்போ
புகுந்த வீடு போரேனு
சினுங்கி
நீயும்
அழுவலாமா
நூறு சுனாமிய
தாங்கிடும்
என்
நெஞ்சுக்கு
உன் கண்ணீர
பாக்குர
தெம்பு
இல்லையே
தங்கம்
வயலுல
வச்ச
நெற்
பயிறு
ஒரு
நாள்
அறுவடை
செஞ்சி
தானே
ஆகனும்
தங்கம்
ஒன்ன
விளையாண்ட
காடு
கரையும்
உன்ன
பிரிஞ்சி
உன்
பெயர்
சொல்லி
கதருதே
தங்கம்
வாக்கப்பட்டு
போர
தங்கம்
உன் புருஷன்
உன் குடும்பம்னு
வாழ
நீயும்
பழகனும்
நீயே
எனக்கு
இன்னும்
குழந்தையாக
இருக்கும் போது
உனக்கொரு
குழந்தை
வந்து
என்னை
தாய் மாமன்
ஆக்குனியே
தங்கம்
என்றும்
எனக்கு
முதல்
குழந்தை
நீ தானடி
தங்கம்
உன்
குழந்தை
தனத்தை
உன்
குழந்தையிடம்
பார்கிரேன்
தங்கம்
தங்கதின்
மதிப்பு
குறையலாம்
அதன்
அழகு
குறையாதே
அதுபோல
நம்
பாசமும்
குறையாதே
தங்கம்
இந்த
ஜென்ம
புன்னியமா
நீ
என்
தங்கையாக
வந்தது
மறு
ஜென்மம்
இருந்தா
வேண்டுகிறேன்
தங்கம்
நீ
என்
தாயாக
வேண்டுமென்று...