கண்ணெதிரே தோன்றினாள் தொடர் கதை - பகுதி 9

நித்தியின் தொலைபேசி எண்ணை பார்த்ததும் விக்னேஷ் ஒருகணம் உலகையே மறந்தான். இதயம் படபட என துடிக்க மனதில் இதுவரை புரியாமல் இருந்த புதிருக்கெல்லாம் விடை கிடைக்க புகைப்படத்தில் முகம் புதைத்து விசும்பினான். ஏதோ ஒரு நப்பாசையில் இவன் விரல்கள் மெல்ல நித்தியின் எண்ணை தொலைபேசியில் தட்டியது... ஆனால் போன் சுவிட்ச் ஆப் என்றே விழுந்தது.. செய்வது அறியாமல் சிதைந்து போன நித்தியின் முகத்தை வருடியவனின் தோள்களை ஆதரவாக தொட்டது நண்பன் சுகனின் கைகள்...