செல்போன் + முகநூல் =

சிறுகதை
தலைப்பு : செல்போன் + முகநூல்= ???

“கொஞ்சம் சாபிட்டு போம்மா , மதியம் ஆகறதுக்கு முன்னமே ரொம்ப பசிக்கும்” வாஞ்சனையுடன் பேசிகொண்டிருந்தாள் மரகதம். தான் வைத்த சாந்து பொட்டை சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு ஒன்பது முறை சரி படுத்தி விட்டு அம்மா சொல்வதை அலட்சிய படுத்திவிட்டு தன் அலங்காரத்திலே குறியாக இருந்தாள் கவிதா, மரகதமும் தன் கணவர் இறந்த பிறகு தன் மூன்று பிள்ளைகளையும் வளப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். மூத்தவள் கவிதா பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத செல்பவள் குடும்பத்தின் கடமைகள் அனைத்தும் இவளை நோக்கி தான் இருக்கிறது என்பதை அறியா விளையாட்டு பிள்ளை, இளையவள் கலையரசி பதினொன்றாம் வகுப்பு படிப்பவள் தந்தையை போலவே குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் வயதிற்கு மீறிய பொறுப்பும் நிறைந்தவள். கடைசி கடைக்குட்டி ரவி ஆறாம் வகுப்பு படிப்பவன், மூவரும் அரசு பள்ளியில் படிப்பவர்கள் எப்பொழுதும் கலையரசியும் ரவியும் ஒன்றாக தான் பள்ளிக்கு செல்வார்கள் கவிதா எப்பொழுதும் ஸ்பெசல் கிளாஸ் எனச்சொல்லி அவசர அவசரமாக கிளம்பி பள்ளிக்கு செல்லாமல் தன் சக தோழிகளுடன் நன்றாக ஊரை சுற்றிவிட்டு கால தாமதமாகவே எப்பொழுதும் பள்ளி செல்வாள்.
மரகதம் தன் வீட்டின் அருகில் உள்ள பஞ்சாலையில் இரவு நேர பணி செய்பவள் காலையில் ஒரு நான்கு வீடுகளுக்கு சென்று முறைவாசல் செய்து கொடுப்பாள், கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து தன் குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து வருபவள். கணவன் விபத்தில் இறந்ததால் அதிலிருந்து கிடைத்த இருபத்திஐந்தாயிரம் பணத்தை வங்கியில் பத்திரமாக வைத்திருக்கிறாள் இப்போதைக்கு இது மட்டுமே இவர்களின் சொத்து.
தேர்வு தாள்கள் கொடுக்கபட்டு இருந்தன பன்னிரண்டாம் வகுப்பில் கவிதாவின் பெயர் வந்ததும் கொஞ்சம் பயத்துடனே முன்னர் நகர்ந்தால் . ‘’நீயெல்லாம் பாஸ் ஆகவே மாட்ட உன் தங்கச்சிய பாரு எப்பவும் கிளாஸ்ல அவதான் முதல் மார்க்’’ கவிதாவுக்கு இதை கேட்கும் போதுகோபம் அதிகமாகவே வந்தது , வழக்கம் போல் வழியில் விற்கபட்ட மசால் பொறியை வாங்கி சாப்பிட்டு பேசிய படி வீட்டிற்கு வந்தால் , ஏன் கவிதா எங்களுகெல்லாம் இந்த மசால் உணவை வாங்கி கொடுக்க பணம் ஏது உனக்கு? ? நேத்து தான் எங்கம்மாகிட்ட பரிச்சைக்கு பணம் கட்டனும் சொல்லி ஐம்பது ரூபாய் வாங்கினேன் என் சிரித்தபடி சொல்லி நடந்தாள். கலையரசி கவிதாவிற்கு முன்னரே வீட்டிற்கு வந்து வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவி படிக்க உட்காந்திருந்தாள் கவிதாவுக்கு கலையரசியை பார்த்ததும் தன் கணக்கு வாத்தியார் தன்னை திட்டியது நினைவுக்கு வந்தது திடிரென்று எப்படி அவளிடம் கோபத்தை காட்ட என யோசித்தவளுக்கு துணுக்காக கிடைத்தது அவளின் ஆடையை கலையரசி போட்டிருந்தாள்... கோபத்துடன் தலையில் ஓங்கி குட்டி விட்டு ஏண்டி என் டிரஸை போட்டிருக்க என்று திட்டிவிட்டு போய்விட்டாள், கலையரசி என்ன செய்வதென்று தெரியாமல் அழுதபடி படித்தாள்.
‘’கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்துல’’ சத்தமாக ஓடிகொண்டிருந்தது அரசாங்கம் கொடுத்த இலவச டீவியில் பாடல் வரியை ஒரு வரி கூட மாறாமல் முனுமுனுதாள் கவிதா ‘அடியே உனக்கு அடுத்த வாரம் பொதுத்தேர்வு பரிட்சை வருது ஞாபமிருக்கட்டும், கருமாரியம்மன் கோவிலுக்கு 101 பணம் போடுறேன்னு வேண்டி இருக்கேன் வேண்டுதல் மட்டும் போதாதுடி நீயும் ஒழுங்கா படிக்கணும் காதுல விழுந்ததா’ என்ற சத்தம் சமையல் கட்டிலிருந்து வந்தது அதையும் அலட்சியமாக எடுத்துட்டு அம்மா எனக்கு இன்னொரு தோசை என்றால், தோசை கொண்டு வந்து கொடுத்து விட்டு அவள் தலையை தடவி ‘’ நீ நல்லா படிச்சா தானே கண்ணு உன் தங்கச்சியை பாத்துக்க முடியும்’’ என்று சொல்லிய பின்பு கவிதாவிடமிருந்து தலையசைப்பு மட்டுமே வந்தது.
இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருகின்றனர் இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதே அரசாங்க தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. அம்மா நான் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன் எனக்கு எதிர்த்த வீட்டு மலர் அக்கா வச்சிருக்கற மாத்தில் செல்போன் கண்டிப்பா வேணும் என கூறினாள், மரகதம் எதையும் காதில் வங்கி கொள்ளாமல் கோவிலுக்கு சென்றால், கவிதா அஸ்வினி நட்சத்திரம் என அவள் பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு வீடு திரும்பினாள்.. ‘’ அம்மா நான் பாஸ் பண்ணிடேன் என அவளின் கழுத்தை கட்டியபடி சந்தோசத்துடன் கூறினால், அப்படியே எனக்கு மலர் அக்கா மாதிரி போன் மட்டும் வாங்கி கொடுத்திடு என சொன்னாள் .. மரகதத்திற்கு சந்தோசமாக இருந்தது. தன் வீட்டுக்காரர் ஆசைப்பட்டபடி தன் மகளை நல்ல கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாள். ‘’ரெண்டு நாளா சாப்பிடாம அடம்பிடிக்கறது நல்லா இல்ல’’ இப்போ போனுக்கு என்ன அவசரம் சொல்லு என்று கெட்ட மரகதத்திற்கு தன் மகளை பார்க்கும்போது ஆத்திரமாக வந்தது, கடைசியில் அவளின் பிடிவாதம் தான் ஜெயித்தது..
‘’ஜானகியம்மாள் மகளீர் கலைக்கல்லூரி’’ என்ற மிகப்பெரிய நுழைவாயிலின் உள்ளே தான் புதிதாக அடம்பிடித்து வாங்கிய செல்போனை நோண்டியபடி சென்றால் கவிதா,, இங்கும் அவளுக்கு நட்பு வட்டாரம் அதிகம்தான் எந்நேரமும் ஒரே சிரிப்பு, செல்போன் கேம் , பாட்டு , என சந்தோசமாக இருந்தாள். தன் செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்அப், போன்ற எந்த வசதியும் இல்லை என தன் தோழிகளுடன் சொல்லி கொண்டிருந்தாள் டோன்ட் வொரி சாயங்காலம் போகும் வழியில இருக்கற செல்போன் கடையில இன்ஸ்டால் பண்ணிக்கலாம் என சொல்லினர். ஒரு வழியாக அந்த இரண்டையும் பதிவிறக்கம் செய்தாள் கவிதா, தன் செல்போனில் அத்தை எப்படி பயன் படுத்துவது என்பதையும் தெரிந்து கொண்டாள்.
‘’கவிதா’’ என்ற பெயரில் முகநூலில் ஒரு கணக்கை தொடங்கினாள். தன் தோழிகளின் உதவியுடன் அன்றிலிருந்து அவள் யாரிடமும் சரியாக பேசுவது இல்லை, டிவிக்கும் ஒய்வு கொடுத்து விட்டு எந்த நேரமும் செல்போனையே பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அதிகமாக பொய்சொல்லி பணம் வாங்கி இணைய இணைப்புகளையும் ஏற்படுத்தி கொண்டாள். தனக்கு முகநூல் வாயிலாக அறிமுகமான நண்பன் தான் ஹரிஸ், நல்ல உயரம் நல்ல கலர் சொல்லப்போனால் பெண்கள் கவரும் ஒரு ஆணழகன். கவிதாவிற்கும் அவனிடம் பேச அதிகம் விரும்பினாள், ஆனால் ஹரிஸ் அப்படியில்லை அணைத்து பெண்களிடமும் பேசுவான் , அதை அவன் ஒரு பொழுதுபோக்காகவே கொண்டிருந்தான். நாள்பட நாள்பட கவிதா ஹரிஸ் கவிதா ஆட்டிவைக்கும் பொம்மையாகவே மாறினாள், வீட்டில் அனைவரிடமும் பேச்சுக்கள் குறையவே சற்றே சந்தேகம் வந்தது மரகதத்திற்கு அவளிடம் பேசிப்பார்கையில் வார்த்தைகள் எதுவும் பிடிபடாமலே பேசினாள், மரகதம் தன் மகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என எண்ணி இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவளை திட்டினாள், கலையரசியை உயர்வாகவும்,பெருமையாகவும் பேசினாள். இது கவிதாவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை அனைவரின் மேலும் வெறுப்பை உருவாக்கியது, கவிதாவிற்கு ஹரிஸ் மட்டும் நல்லவன் போல் தோன்றியது.
கவிதாவின் இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகளும், கலையரசியின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஒரு சேர வெளியாகின. கலையரசி பள்ளியில் முதல் மதிப்பெண்ணும், மாவட்டத்தில் மூன்றாம் மதிப்பெண்ணும் பெற்றிருந்தாள். கல்லூரிகள் போட்டி போட்டுக்கொண்டு இலவசமாக படிக்க அழைத்தன, ‘’முருகன் இஞ்சினியரிங் கல்லூரயில்’’ தனது படிப்பை இலவசமாக தொடங்கினாள் நிறைய கனவுகளுடன் இருந்த கலையரசி தங்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஒரு சிறந்த மேடையாக பயன்படுத்தினாள், கவிதா வழக்கம் போல ஐந்து பாடங்களில் மூன்று பாடங்களில் தேரவில்லை, பேராசிரியர் கவிதா நாளைக்கு வரும்போது கட்டாயம் அம்மாவோட வந்தா காலேஜ் வா இல்ல டீசி வாங்கிட்டு போ என்று அதட்டலாக சொல்லி விட்டனர்.
“பாவி மகளே என்னடி பண்ண ஒழுங்கா படிச்சா என்னடி உனக்கு உன் தங்கச்சிய பாருடி சனியனே சனியனே’’ என வாய்க்கு வந்தபடி திட்டினாள் மரகதம், அதற்கு தகுந்தார் போலவே கல்லூரியிலும் சரியாக படிக்கவில்லை விளையாட்டு அதிகம் செல்போன், மற்ற மாணவிகளையும் சேர்த்து கெடுக்கிறா உங்க பொண்ணு , உங்க முகத்திற்காக தான் பார்க்கிறோம் இல்லைனா என்னைக்கோ வீட்டுக்கு அனுப்பி இருப்போம் என சொன்னபோது ஆத்திரமும் , அழுகையுமாக வந்தது மரகதத்திற்கு வீட்டிற்கு வந்ததும் பயங்கரமாக அடித்து விட்டாள், மொத்தத்தில் கவிதாவிற்கு தன் குடும்பம் மட்டுமே மொத்த எதிரியாக தெரிந்தது.
ஹரிஸ் உடன் இரவு 12 மணிக்கு வாட்ஸ்அப்பில் சேட் செய்து கொண்டிருந்தாள் கவிதா , நடந்தவைகளை எல்லாம் சொல்லி கொண்டிருந்தாள் , ஹரிஸ் சற்றும் யோசிக்காமல் கவிதா நீ என் கூட வந்துடுறியா உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன் ராணி போல பாத்துக்கறேன் அப்படி சொல்லவும் கவிதாவும் சரி என்று தலையசைத்தாள் , விடிந்ததும் கவிதா ஒரு ஏழு மணி போல் என்றைக்கும் விடவும் அதிகமாக அலங்காரம் செய்து விட்டு கிளம்பினாள் , தெரு முனையில் இருந்த பிள்ளையார் முன்பு கவிதாவிற்கு தாலி கட்டினான் ஹரிஸ் நண்பர்கள் யாரும் இல்லை கையேடு காவல் நிலையத்திற்கும் சென்று பாதுகாப்பு என்ற பெயரில் தஞ்சம் கேட்டனர்.
மரகதம் இந்த செய்தியை கேட்டு அரக்க பறக்க ஓடி வந்தால் காவல் நிலையத்திற்கு “ என் கண்ணு வா தங்கம் நம்ம வீட்டுக்கு போலாம் உன் காலுல கூட விழுகறேன் ராசாத்தி “ என கெஞ்சிய மரகதத்தை கையை தட்டி விட்டு ஊதாசின படுத்திய கவிதா நான் மேஜர் என் வாழ்கையை முடிவு செய்ய எனக்கு உரிமை இருக்கு என்ச் சொல்லி ஹரிஸ் உடன் செல்ல முற்பட்டாள் மரகதத்திற்கு ஆத்திரமும் அழுகையும் தாங்க முடியாமல் வந்தது பெத்த மகள் இப்படி செய்கிறாளே என்ற ஆதங்கத்தில் இனி எனக்கும் என் மகளுக்கும் எந்த சமந்தமும் இல்லை என எழுதி கொடுத்து விட்டு அழுகையுடன் வீடு நோக்கி சென்றாள்.
கவிதா பல கனவுகளுடன், சந்தோசங்களுடன் சென்றாள் அங்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்,நல்ல வசதி உடையவன் போல் பல புகைப்படங்களை எடுத்து முகநுலில் தன் ப்ரோபைல் போட்டோவாக வைத்திருந்தான் உண்மையில் வசதி படைத்தவன் இல்லை, கம்யூட்டர் இன்சினியர் என பொய் சொல்லி இருந்தவன் பத்தாவது கூட தேறாதவன் தான், ஹரிஸ் என்ற பெயரும் கூட பொய் தான் அவன் பெயர் குமரேசன் வேலை எதுவும் இல்லாமல் பெற்றவர்கள் சம்பளத்தில் வாழும் ஒரு வேலை இல்லாதவன், கவிதாவை திருமணம் செய்து விட்டு வந்தததை முதலில் குமரேசனின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அப்புறம் படித்த பெண்ணும் கூட வேலை சென்றால் சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஏத்துக்கொண்டனர் .
காலை 5மணி இருக்கும் எல்லோருக்கும் முன்பு எழுந்து வீடு பெருக்கி, சமையல் செய்து துணி துவைத்து விட்டு ஒரு இரண்டு கிலோ மீட்டர் தள்ளி தண்ணீர் கொண்டு வந்து இருந்தவளுக்கு தன் அம்மா ஞாபகம் வந்தது, தன் வீட்டில் இருக்கும் போது கலையரசி செய்யும் வேலைகளை கூட கவிதா ஒரு போதும் செய்வதில்லை ஆனால் இங்கு கவிதாவின் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் , அதுமட்டுமில்லாமல் வேலைக்கும் போக சொல்லி டார்சர் வேறு, “ கவிதா , கவிதா” , குமரேசன் சத்தமாக அழைத்தான் அரக்க பறக்க ஓடி சென்றாள் வீடு எங்கும் சாப்பாடு சிதறி கிடந்தது , என்ன என்பது போல் பயத்துடன் குமரேசனின் முகத்தை பார்த்தாள்.
என்ன சாப்பாடு செஞ்சு பலகீருக்க உப்பும் இல்லை ஒன்னும் இல்லை என்று சத்தம் போட்டான், அவனின் சத்ததிற்கும் மேல் வெளியே ஒரு பெண்ணின் சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்தாள் அது குமரேசனின் முன்னாள் காதலி கவிதாவை திருமணம் செய்து விட்டு வந்த செய்திய கேட்டு மண் எல்லாம் தூற்றி சத்தம் போட்டாள் கவிதாவையும் சாபம் இட்டாள், கவிதா இதெல்லாம் தாங்க முடியாதவளாய் ஏன் இதெல்லாம் சொல்லலை என கேள்வியாய் கேட்டாள் குமரேசனோ இருந்த கோவத்தில் கவிதாவை கண் முன் பாராமல் அடித்து விட்டான், இந்த வீட்டில் இருக்கணும்னா நான் செய்யறத எதையும் கேட்க கூடாது என சொன்னான் .
கவிதா இதற்கு மேல் இனி இங்கு இருக்க கூடாது அம்மாவும் ஏத்துக்கமாட்டா என எண்ணி யோசித்தபடி நடந்தாள் அவளுக்கு யோசனை வந்தவளாய் அருகில் உள்ள பஞ்சாலையில் வேலை கேட்டு சென்றாள். விடுதியும் அங்கேயே இருந்தது அவளுக்கு தங்கவும் இடம் கிடைத்தது, ஆறு மாதம் ஓடி விட்டன, தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. பஞ்சாலையில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் போனஸ், இனிப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பஞ்சாலைக்கு மொத்தம் மூன்று கிளைகள் இருந்தன. விழா என்றால் மட்டும் அணைத்து பணியாளர்களும் ஒன்றாக சந்திப்பார். தீபாவளி விழா சம்மந்தமாக அணைத்து பணியாளர்களும் கூடி இருந்தனர். கவிதாவும் இருந்தாள் , அதே இடத்தில் மரகதமும் ஒரு மூலையில் நின்றிருந்தாள், விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர், தண்ணீர் குடித்து விட்டு நிமிர்ந்த மரகதம் எதிரே கை கழுவி கொண்டிருந்த கவிதாவை பார்த்தாள் ‘’ என் செல்லமே எப்படி இருக்கடி இங்க என்னடி பண்ணற உன் வாழ்க்கைல நீயே மண்ணை அள்ளி போட்டுகிட்டையேடி’’ என கதறி அழுதாள் மரதம், பொது இடம் என்று பாராமல்,அம்மா என்ன மன்னிசிடுமா என காலில் விழுந்து அழுதாள் கவிதா , அவர்களை பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, என்னைக்கு இருந்தாலும் நீ என் பொண்ணு வா தங்கம் போலாம் என கவிதா கை பற்றினாள்.. கவிதா செல்லும் வழியில் அருகில் இருந்த குப்பை தொட்டியில் கையில் இருந்த செல்போனை போட்டு விட்டு ஒரு முழு மன நிம்மதியுடன் இருவரும் புதிய வலிகளை தாங்கிய படி நடந்தனர்.........

எழுதியவர் : கா. நாகராணி (21-Aug-16, 12:52 pm)
சேர்த்தது : நாகராணி
பார்வை : 596

மேலே