நாங்கள் விதி விலக்குகள்

ஆமாம் அவள் அழுது கொண்டுதான்
இருப்பாள்..
இந்த முடிவுக்கு
அவள் எப்பொழுதோ
வந்து விட்டாள்..
கொடுக்கப் பட்ட அனைத்து
சந்தர்ப்பத்திலும் உன்
தவறுகள் அதிகமாகும்
வரை அவள்
பொருத்து இருந்தாள்...
காதலுக்கும் காமத்திற்கும்
உனக்கு வித்தியாசம்
தெரியாத பொழுதே
அவள் விழித்துக் கொண்டாள்..
யாருடைய கருவை சுமக்க
வேண்டும் என்பது அவளுக்கு
தெரியாதா?

எழுதியவர் : (21-Aug-16, 4:08 pm)
பார்வை : 40

மேலே