மறந்தே போய்விட்டேன்
உன் நினைவுகளை நிலவில் பதிவு செய்து அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன்னிடம் காட்ட
நட்சத்திரங்களை நூற்க்கோர்த்து அதை உன்கழுத்தில் மேலமர்ந்து கவிப்பாட காத்திருக்கிறேன்
மேகங்கள் எல்லாம் மெருவூட்டி உன் மெனுடலை மெலிதாய் வருட செய்ய நேரம் பார்த்திருக்கிறேன்
எத்தனையோ நாட்கள் இத்தனையும் எண்ணிப்பார்த்திருக்கிறேன் இன்னும் இவ்வுலகம் உனக்குயிடாகாது
என்பதை மறந்தே போய்விட்டேனடி...