கவிதைக்கு தலைப்பு அளிக்கவும்

செய்தித் தாளில் படித்ததின் தாக்கம்
********************************************

நான் ஒரு பெண்.....
பெண் என்று சொல்லிக் கொள்ள பெருமை கொள்கிறேன்...
பாரதி கண்ட புதுமைப்பெண்....

வெட்டியாக பேசுவதற்காக பல மனிதர்கள் முகநூலுக்கு வருகிறார்கள்
சாமி புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்து கொள்ளவும் சில கூட்டம் தவறுவதில்லை..

நான் என்ற அடையாளத்தை
ஆழப்படுத்துங்கள்....
யார் எது சொன்னாலும்
ஏமாந்து விடாதீர்

பாரதி போல்
தேடிச் சோறு நிதம் தின்று
என்று பாடுங்கள்....

ஏமாந்து போக நீ
ஒன்றும் மங்கை அல்ல
பாரதியின் புதுமைப் பெண்
உன்னை ஏமாற்ற எவராலும்
இயலாது என்றே வாழ்


உலக அறிவை வளர்த்துக் கொள்ள வழி சமூக வலைதளங்கள்
என்று நம்புபவள் நான்...
ஆனால் அதில் சில பச்சோந்திகள்
உலவுகிறார்கள் என்பது
செய்தித் தாள்களிலும்,
இணையதளங்களின் மூலமாக
அறிந்து கொள்ள முடிகிறது...

நீ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால்
இணையத்தையும் சமுக வலைதளங்களையும் முறையாக பயன்படுத்த வேண்டும்.
என்ற தொலைநோக்கு பார்வையுடன்
எனக்கு முகநூல் கணக்கையும்,
மின்னஞ்சல் கணக்கையும்
உருவாக்கி தந்தவர்
என் அண்ணன் தான்

ஆண்களில் நல்லவர்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள்....
அதில் நயவஞ்சகர்கள் நிறைய பேர் நல்லவர்கள் வேடத்தில் இருப்பார்கள்
ஆதலால் தான் என்னவோ
உலகிலேயே மிகவும் கொடூரமான
விலங்கு மனிதனாகிறான்.
எளிதில்
புரிந்து கொள்ளுவதற்கு இயலாத ஓர் படைப்பே மனிதன்.....
யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள்...

காட்டில் விலங்குகளை பார்த்தாலே தெரியும்....
நாட்டில் அப்படி இல்லை....

சில பக்கங்கள், சில விளம்பரங்கள்,
சில புகைப்படங்கள்.....
ஏன் இந்த பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாமே?

புதிதாக ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள்
எல்லோரும்

அது என்ன என்றால்

இணையதளத்தில் டொரன்ட் போன்ற பக்கத்தில் திரைப்படத்தை பதி விறக்கம் செய்தால் மட்டுமல்ல
அந்த பக்கத்தை சென்று பார்த்தாலே நமக்கு மூன்று ஆண்டுகள் சிறையாம்......

எந்த விதத்தில் நியாயம் இது...
அரசாங்கத்தால் இந்த Web Site ஐ நீக்க முடியாது...
நாம் மட்டும் தண்டனை அனுபவிக்க வேண்டும்...

இது எப்படி இருக்கிறது தெரியுமா...

குடிகாரன் கையில் நீயே குடியை கொடுத்து விட்டு
குடிக்காதே...
குடித்தால் தண்டனை....

அதற்கு ஏன் மதுவை நீங்கள் விற்க
வேண்டும்?????????????????????????

மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்று
எண்ணுகிறீர்களோ????????????

~ பிரபாவதி வீரமுத்து

=================================

பாரதி வரிகளை போல்
இன்றைய புதுமைப் பெண்கள்

வீழ்வேனேன்று நினைத்தாயோ?
என்று வாருங்கள்
முன்னோக்கி
தடைகளை தாண்டி
சிகரம் தொட வா மகளே.....


ஏதோ ஒரு பெண் தானே
என்று தாண்டி
போக நான் ஒன்றும்
மிருகம்
அல்ல...

என்னால் முடிந்த விழிப்புணர்வை
பெண்மைக்கு செய்வேன்...
செய்து கொண்டே இருப்பேன்....

பெண்மை என்பதை
தாய்மை என்பதறியா மாக்கள் உலகம் இது.....

வெற்றி நடைபோடு
எட்டி பிடி வானை
அள்ளி எடு விண்மீனை

மகளே
பூவில் முள்ளை வைத்திருந்தாலும்
பூவை பூவே ரசித்திடு
முள்ளை உடைத்தெறி


வரும் காலம்
உன் காலம்
யார் காலையும் நம்பி இருக்காதே...
எழுந்து வா.....
தானாக விழு
தானாக எழு

இன்றைய பெண்கள்
செய்யும் தவறு

கொஞ்சம் பாசமாக பேசி விட்டாலே
உண்மை என்று நம்புவது.....

பெண்ணே
அன்பில் அன்னை நீ
ஆத்திரத்தில் கனல் நீ
பண்பில் தமிழச்சி நீ
வீரத்தில் உனக்கு நிகர் யார்
தைரியம் நம்பிக்கை உனக்கிருக்கு
உனக்குள்ளே
வெளியே எதையும் தேடாதே
உனக்குள்ளே இருக்கு உலகம்

நீ என்ற நீயே உனக்கு யாவும்
எல்லா உயிர்களிடத்தில் அன்பு செலுத்து.....

எனக்கு சொல்லத் தெரியவில்லை
காரணம்
ஒரு வார்த்தையில் விளக்கம்
#நயவஞ்சகம்.
நயவஞ்சகமாக தான்
இருக்க வேண்டும்...

எத்தனை திரைபடங்கள் பார்க்கிறோம்
ஆனாலும் திருந்தாத மனித பதர்கள்...

ஏமாறுவதற்கு சில கூட்டம் இருக்கும் பொழுது
ஏமாற்றுபவனும் தலை தூக்கி நிற்பான்...

பெண்ணே நீ ஏங்கி நிற்காதே
ஏறி போ
உன் பாதையில்.
பாதையில் முள் வந்தால்
தூக்கி எறி

நயவஞ்சகம் என்பது ஒன்றும் இல்லை
நுனி நாக்கில் தேனை தடவி
அடி மனதில் நஞ்சை வைத்திருக்கும்.

காலத்திற்கு ஏற்றாற் போல் மாறினாலும்
நாம் என்றும் தமிழர்கள் தான்

காலாச்சாரமும் பண்பாடும்
தமிழனின் உயிருக்கு நிகரானவை

~ இவள் பாரதி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Aug-16, 7:39 am)
பார்வை : 266

மேலே