அத்தனைக்கும் ஆசை படு
![](https://eluthu.com/images/loading.gif)
அத்தனைக்கும் ஆசை படு !
அதன் ஆழங்களையும் (ஆசையின் ) அறிந்துவிடு !
சத்தம் இல்லா ஓசைகளும் உண்டு !
அர்த்தம் அறியா ஆசைகளும் உண்டு !
புத்தம் புதிதாய்,
நித்தம் ஒரு ஆசை,
நிஜம் தொட்டதும்,
நிலைகுலையும் நீர்குமிழியாய் !
ஏக்கத்தின் ஆக்கமாய் சிலவகை ஆசை,
ஊகத்தின் உயிரோட்டமாய் பலவகை ஆசை!
உண்மை உணராதது நப்பாசை,
பெண்மை போற்றுவது "பொன்னாசை,
ஆண்மையை ஆட்கொள்வது "பெண்" எனும் ஆசை
ஆணவத்தில் பிறப்பது பேராசை,
அமைதியில் கிடைப்பது அகிம்சை,
ஆதலால்!
அர்த்தமுள்ள ஆசையை பயிர்செய்.