காதலை தேடி-16

காதலை(லே) தேடி-16

உன் மூச்சும் என் மூச்சும்
ஒன்றாக பயணிக்க
நம் காதலின் ஸ்வாசத்தில்
கரைந்து கொண்டே கலந்திருப்போம்
இந்த ஜென்மம் முழுதும்.........

நீயாகவும் நானாகவும்
நாமாகவும் வாழும்
ஓர் காதல் வாழ்க்கை போதுமே
இனி ஒரு ஜென்மம்
வேண்டுமென்ற ஆசையை மறக்க!!!!!!

விழிகளை கடந்து
உன் இதயத்தில் நுழைந்து
காதலை ஸ்பரிசிக்கவே
காற்றோடு காற்றாய்
உலவி கொண்டிருக்கிறேன் என்
காதல் என்றும் உன்னோடு சகியே!!!!!

"சகி என்ன பண்ணிட்டு இருக்க?"

"இதுகூட தெரியலையா, நான் ட்ராயிங் பண்ணிட்டு இருக்கேங்க, எல்லாமே சரியா வந்துடுச்சு பட் இந்த கிளியோட மூக்கு மட்டும் சரியாவே வரலங்க, எவ்ளோ ட்ரை பண்ணி பாத்தும் எதோ மிஸ் ஆகுது......"முகத்தை சுருக்கி கொண்டு ஒரு குழந்தையை போல அவள் என்னிடம் பேசுவதை பார்க்கும்போது இதற்காகவே ஏழேழு ஜென்மமும் சகி எனக்கு மனைவியாய் வரவேண்டுமென்று என் நெஞ்சம் விரும்பியது..........

"சகி நான் வேணா ட்ரை பண்ணி பாக்கறேன்,பென்சிலை என்கிட்ட குடு"

"நோ, இந்த ட்ராயிங் நானே பினிஷ் பண்ணா தான் எனக்கு திருப்தியா இருக்கும்"..

இவள் நிச்சயமாய் குழந்தையே தான், மனதிற்குள்ளே சிரித்து கொண்டேன்...........

பத்து நிமிஷமாய் வரைவதும், அழிப்பதும், பென்சிலை உதடுகளின் மேல் வைத்து கொண்டு யோசிப்பதுமாய் என் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தால் என் ஆசை நாயகி.......

"சகி போதும் நீ ட்ரை பண்ணது எல்லாம், குடு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்........"

நான் பென்சிலை வாங்க கைகளை நீட்டவும் அவள் தன் கைகளை பின்னால் இழுத்துக்கொண்டு பென்சிலை மறைக்கவும் சரியாக இருந்தது........

"சகி என்ன விளையாட்டு இது, குடுமா, நான் கிளி மூக்கு வரையறதால இந்த ட்ராயிங் புல்லா நான் தான் செஞ்சேன்னு பெருமை அடிச்சிக்க மாட்டேன்..........நீ என்ன நம்பலாம்"

"நான் ஒன்னும் அதுக்காக சொல்லல, அது மட்டும் இல்லாம பெருமை அடிச்சிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் சூப்பரா வரையலை, இந்தாங்க பென்சில்"முகத்தை சுருக்கிக்கொண்டு நான் சொன்ன வார்த்தையின் பாதிப்பை உதடுகளின் சுழிப்பிலும், உம்மென்று வைத்துக்கொண்ட முகபாவத்திலும் அழகாகவே காட்டி என்னை அதிர வைத்தாள்.......

"இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு கோவிச்சிக்கிற, நீ பினிஷ் பண்ண முடியாம கஷ்டப்படறன்னு தான ஹெல்ப் பண்ண வந்தேன், இப்படி மூஞ்ச தூக்கி வச்சிகிட்டா நான் என்ன பண்றதுமா".......

அவள் எதையும் சொல்லாமல் அதே முகபாவத்தோடு நின்று கொண்டிருந்தாள்.......

சில மணித்துளிகள் யோசித்துவிட்டு "சரி ஒரு சூப்பரான ஐடியா இருக்கு, நான் உன் கை பிடிச்சி உனக்கு ஹெல்ப் பண்றேன், எனக்கும் ஹெல்ப் பண்ண மாதிரி இருக்கும், உனக்கும் மன திருப்தி கிடைக்கும்"நான் யோசனை சொன்னதும் அவளும் தனக்கு சம்மதம் என்று அவளின் மெல்லிய புன்னகையில் தெரிவித்தாள்.....

நான் சகியின் கைகளை லாவகமாக பிடித்துக்கொண்டு அவள் கைகளில் வைத்திருந்த பென்சிலால் வரைய ஆரம்பித்தேன்.......

ஒரு கை தான் வேலை பார்க்கிறது, இன்னொரு கையை ஏன் சும்மா வைத்திருக்கணும், என் ரொமாண்டிக் அறிவு கேள்வி கேட்க, இதற்க்கு மேலும் சும்மா இருக்க முடியுமா????.........என் இடது கையை சகியின் இடுப்பிற்கு மெதுமெதுவாய் நகர்த்த அவளோ எதையோ சாதிக்க போகும் உற்சாகத்தில் கிளியின் மூக்கை வரைவதிலேயே குறியாக இருந்தாள்......

நானோ ஒரே நேரத்தில் கிளியின் மூக்கையும், சகிக்கும் எனக்கும் இடைப்பட்ட நெருக்கத்தையும் வரைய ஆரம்பித்தேன்.......

அவள் இடுப்பின் வளைவுகளில் என் கை பிறப்பெடுக்க அவள் பெண்மையோ தலைதூக்க ஆரம்பித்தது.....சட்டென நெளிந்தவள் அவளை என் கைகளின் சிறையிலிருந்து விடுவிக்க முயற்சித்தாள்......

"இரு சகி, ட்ராயிங் புல்லா முடியல, இன்னும் பியூ மினிட்ஸ் அப்படியே இரு, இப்போ நீ நகர்ந்தா ட்ராயிங் சரியா வராது......."

ஒரு நிமிட தயக்கத்திற்கு பிறகு ஓவியத்தை முடிக்க எண்ணி மீண்டும் அவளின் கைகளை என் கைகளுக்குள் பதித்தாள்...

இந்த முறை என் சூடான மூச்சுக்காற்று அவளின் சங்கு கழுத்தில் தடம் பதிக்க அவளுக்கோ அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது, கைகளெல்லாம் வேர்த்து கொட்ட ஆரம்பித்தது......

"நா, நான்..... ன்.......நீங்களே வரஞ்சிடறீங்களா, எனக்கு...... கொஞ்சம் வேல இருக்கு....."தட்டு தடுமாறி தட்டச்சு போல் அவள் வார்த்தைகள் படபடத்தது......

"சகி இன்னும் டூ மினிட்ஸ் தான்,ஏன் இப்படி அவசரப்படற, என்ன உனக்கு பிடிக்கலையா???"தாப ரேகை என் குரலில் இழைந்தோட அவள் காதோரமாய் கிசுகிசுத்த என்னை என் இளமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து நின்றாள்.........


முழுமையாக இரண்டு நிமிடங்களை கடந்திருப்போம் அவளோடு என் மூச்சு காற்று கரைந்து நாங்கள் இருவரும் காற்றோடு கலந்திருந்த நொடி எத்தனை சுகமானது.......நினைக்கையிலேயே............

"சார் என்ன ஆச்சு.."

திடுக்கிட்டு என் கண்களில் வழிந்த கண்ணீரை கைக்குட்டையால் வேகமாய் துடைத்துவிட்டு சரியாக காரின் சீட்டில் அமர்ந்து கொண்டு "நத்திங் டு ஒர்ரி, ஹோட்டல் வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்" என்று டிரைவரிடம் கேட்க "சார் இன்னும் பத்து நிமிஷத்துல ரீச் ஆகிடலாம் " என் நிலையை வருத்தத்தோடு ஆராய்ந்தவாரே கூறிவிட்டு மீண்டும் வண்டியை ஓட்டும் தீவிரத்தில் மூழ்கி விட்டார்..........

கைபேசி அலறிக்கொண்டு துடிக்க அதை ஆசுவாசப்படுத்திவிட்டு பேச ஆரம்பித்தேன்........எதிர்பக்கத்தில் பேசுவது முகமது தான்.....

" சார் நான் முகமது பேசறேன், இங்க ஹோட்டல்ல எல்லா அரேஞ்மெண்ட்ஸும் பண்ணிட்டேன், நீங்க இங்க வரது மட்டும் தான் பாலன்ஸ்"

"ம்ம்ம், ஐ நோ யுவர்ஸெல்ப் முகமது, யு ஆர் பெர்பெக்ட்......., அண்ட் தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் ....."

"சார், இதெல்லாம் என்னோட கடமை, இதைப்போய் பெருசா பேசிட்டு என்ன சங்கடப்படுத்தறீங்களே........"பணிவின் உச்சத்தில் மென்மையாக பேசிய முகமதிடம் இன்னும் சிறிது நேரத்தில் ரீச் ஆகும் செய்தியை கூறிவிட்டு என் கடந்த காலத்தில் கலக்க ஆரம்பித்தேன்"

என் மூச்சும் அவள் மூச்சும் புதிதொரு பிறவி எடுத்திருக்க இளமை மோகத்தில் என் விரல்கள் அவளை பதம் பார்க்க ஆரம்பித்தது.......இத்தனை நேரம் பென்சிலால் வரைந்த ஓவியத்தை விட ஓவியமாய் என் கைக்குள் இருக்கும் என் சகியின் மேனியில் என் விரல்களால் நான் வரைய துவங்கியதே இன்பத்தின் உச்சமாய் என்னை உணர வைத்தது.......

என்னை தடுக்க முடியாமலும், இதில் எழும் வித்தியாசமான அனுபவத்தை சுவைக்க முடியாமலும் தவித்து தடுமாறி என் கைக்குள்ளேயே மௌனம் சாதித்தாள் என் சரிபாதியானவள்......

சகி.................மெதுவாக அவள் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி ராகம்போட்டு அவள் பெயரை உச்சரிக்க, என் கையணைப்பில் கிறங்க துவங்கியவள் மெதுவாக விழிகளை திறந்து கிரங்கியபடியே "ம்ம்ம்ம்ம்ம்ம்" என்று மெல்லிசை பாடினாள்.......

"உனக்கு பிடிச்சிருக்கா?"

அவளிடம் எந்த பதிலும் இல்லை......

"நீயும் இதையெல்லாம் ரசிக்கிற தான!!!"

என் வாயே தான் எனக்கு எதிரி என்பதை உண்மையாக்கிவிட்டேன்..... கிறக்கம் கலைந்தவளாய் விழிகளை விரித்து பார்த்து தலையை குலுக்கி கொண்டு என்னை தள்ளிவிட்டு விலகி நின்றாள்......

"எனக்கு, நான் கீழ போறேன்".........

அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்காமல் ஓடியே போய்விட்டாள்........இப்படி அவள் வாழ்க்கையை விட்டு நான் ஓடும் தருணம் வெகு தொலைவில் இல்லை, எக்காளமிட்டு சிரித்தது எங்களின் தாப வேட்கையை பார்த்த விதி.......

எங்க போக போற, இன்னும் என்னோட விளையாட்டில் ஒரு நாள் கூட முடியலையே, இன்னும் முழுசா ரெண்டு நாள் இருக்கு....இந்த ரெண்டு நாள் முடியறதுக்குள்ள நீ முழுசா என்னோட காதலை உணர ஆரம்பிச்சிருப்ப.........குறும்புடன் சிரித்துக்கொண்டே என் அடுத்த விளையாட்டிற்கு சூழ்நிலையை வளைக்க ஆரம்பித்தேன்.......

எழுதியவர் : இந்திராணி (23-Aug-16, 2:54 pm)
பார்வை : 557

மேலே