கண்ணிமை
கண்ணே உன் விழிகள்
சொல்லிடுமே ஆயிரம் அர்த்தங்கள்
ஆயிரம் பேர் முன்னிலையில்
பேசாமல் பேசுவாயே
கண் ஜாடையில்
எனக்கு மட்டும் விளங்கிட...
விழியாலே சொன்னாயே
காதல் என்னிடம்
என் விழியும்
உன் விழியும் சந்தித்த
வேளை...
பட்டாம்பூச்சியை போல்
படபடத்ததே உன் கண்ணிமை...
எனக்கு உன்னிடம்
பிடித்ததே உன் அழகான
விழியும் உன் நாணமும்...
உன் நாணத்தையும்
எனக்கு உணர வைத்தாய்
உன் விழியால்...