அம்மணமாய் உணர்கிறேன்

தலித் என்பது என் பட்டமா ?
தலித்தாய் பிறந்தது என் குற்றமா ?

கட்டியவள் கண்ணீரில் ;
பிள்ளைகளோ கதறலோடு ;
பெற்றவரோ பேரதிர்ச்சியில் !

இழுத்து செல்லும் மேல் சாதி ;
காவல் காக்கும் காக்கிச்சட்டை - நான்
கத்துவதும் காதில் விழவில்லை - காண்பவருக்கு ;
கச்சிதமாக படப்பிடிப்பு கைபேசியிலே !

வேடிக்கை பார்க்கும் மாக்களே !
தட்டிக்கேட்க தயக்கமேன் ?
விடிந்தும் இருட்டிலே !
உடுப்போடு நான் இருந்தும் ;
அம்மணமாய் உணர்கிறேன் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (24-Aug-16, 1:16 pm)
பார்வை : 78

மேலே