நீ போதும்

விளக்கு வேண்டாம்

விடியலும் வேண்டாம்...

என் வாழ்க்கை ஒளிபெற வேறு எதுவும் வேண்டாம் நீ போதும் ...!



கனவு வேண்டாம்

கட்சிகளும் வேண்டாம் ...

என் கண்கள் உயிர்கொள்ள வேறு எதுவும் வேண்டாம் நீ போதும்....!



காதல் வேண்டாம்

காமமும் வேண்டாம்...

என் பெண்மை இரவுகள் அமைதிகொள்ள வேறு எதுவும் வேண்டாம் நீ போதும்....!



உறவுகள் வேண்டாம்

உயிர் அதுவும் வேண்டாம் ...

எனக்கு இங்கு நானும் வேண்டாம்..... நீ போதும்...!!

எழுதியவர் : நிவேதா (24-Aug-16, 3:02 pm)
Tanglish : nee pothum
பார்வை : 124

மேலே