மெல்லிய அழகு ,, முறித்து எடுத்த சில சிறகுகள் -3

அவளின்
வெண்ணிற ஆடையில்......,
அவள் (selma )
மெல்லிய அழகு
கொண்டிருந்தாள் .....,
ஜன்னலை கடந்து
வரும் நிலவொளியைப் போல.........,

அவள்
நடந்தாள்?!
ஒருவித வாஞ்சையோடு .......,
இசை பூக்கும்
ஒரு வித
துடிப்போடு ........,


அவளின்
குரலும்
அவளைப்போல் மென்மையாய் .........,
இன்னும் சற்றே
இனிமையாய் ..........,
காற்றினால் சலனப்பட்ட
பூவின் இதழ்களிலிருந்து இடறி
விழும் பனித்துளியைப் போல் ........,
விழுந்தன அவளின்
இதழ்களிலிருந்து
வார்த்தைகள் ..,


ஆனால்
அவளின் (selma ) முகம் !
வார்த்தைகளால் இயலாது
அதை விவரிக்க .............,
அது பிம்பமெடுக்கும்
என்
மனதின் துன்பம்.,
மேலும்
இன்பமானதொரு
வலி............

எழுதியவர் : ஹாதிம் (24-Aug-16, 12:20 pm)
பார்வை : 291

மேலே