புளிப்புச் சுவை

தாய்மார்களே நீங்கள் சமைக்கிறீர்கள் அவற்றில் புளியைக் கரைக்காமல் உங்களுக்கு ஒரு குழம்பு வைக்க முடியுமா? புளி இல்லாமல் ஒரு குழம்பா? என்று கேட்கக் கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

அதிகப்படியான புளிப்புச் சுவையை நாக்கால் சுவைக்கும் போது பற்கள் கூசும். நடுங்கும். ஒவ்வொரு முறையும் புளிப்புச் சுவையை உணவில் சேர்க்கும் போது பற்களும், ஈறுகளும் பலவீனமடைகின்றன.

அதிகமான புளிப்புச் சுவை கல்லீரலை மோசமாக்குகின்றன. புளிப்புச் சுவையை நாக்கால் ருசிக்கும் போது கண்கள் கூசிச் சுருங்குவதை நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள்.

இச்சுவை கல்லீரலை மந்தப் படுத்தும். அதே நேரம் கண்களையும் பாதிக்கிறது. கல்லீரல் பாதிக்கப் பட்டவர்கள் காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள்ளாக வெயிலில் சென்றால் கண்கள் கூசும்.

நடுப் பகலில் வெயிலில் செல்லக் கஷ்டப் படுவார்கள். இவை பொதுவாக கல்லீரல் பாதிப்பை நமக்கு உணர்த்துகிறது. அதிகமான புளிப்புச் சுவையுடைய உதாரணமாக புளிப்பான மாங்காயை கடிக்கும் போது பற்களும் கண்களும் ஒரு சேரக் கூசுகிறது.

இது கண்களையும் பற்களையும் பாதிக்கிறது. கண்களுக்கும் பற்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பற்களில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் நிச்சயமாக கண்களை பாதிக்கிறது. அதேபோல கண்களில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் பற்களைப் பாதிக்கின்றன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (25-Aug-16, 11:25 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 52

மேலே