என்னவளின் வெட்கம்

என்னவளின் வெட்கம்
பருவம் சொல்லும்
பளிங்கி இதழாற்றின்
வெட்கமெனும்
வெள்ளி நீரோடை.

முத்திரையாய்
சின்ன நாணமுகம் காட்டி என்
நித்திரை தொலைக்கும்
முதல் மாத்திரை .

காதல் வினாவிற்கு
தெளிவுரைதரும்
கோனார் உரை.

ஆயிரம் மங்கை அணிவகுத்தாலும்
என்னவளின் வெட்கம்
காதல் தேர்தலில்
வெற்றி வாக்கைப்பதித்தலுக்கான
அழியா அடையாள மை.

மூடிக்கிடந்த மனம்
ஆவி பறக்க திறக்கும்
ஆகாய அருவி.

எத்தனை
பொன்னகை பூட்டினாலும்
அத்தனையும் வெல்லும்
என்னவளின்
வெட்கப்புன்னகை.

எழுதியவர் : அ.ராஜா (26-Aug-16, 4:08 pm)
சேர்த்தது : அராஜா
Tanglish : ennavalin vetkkam
பார்வை : 445

புதிய படைப்புகள்

மேலே