என் அப்பா,

அப்பா,
தினம் தினம் திட்டும் பொது எல்லாம் சிரித்த நான்
இன்று
நீ ஒரு முறை அன்பாய் பேசினால்
நாள் முழுவதும் அழுகின்றேன்
காரணமில்லாமல்...............

இங்கு நான் காதிருந்தும் செவிடனாய்
கண்ணிருந்தும் குருடனாய்
திரிகின்றேன் விதியோடு
வீதி வீதியாய்..........

நீ
என் அருகில் இருக்கும் போது
சூரியனாய் இருந்த நான்
இன்று நிலவாக தேய்கின்றேன்
நீ இல்லாமல்..........

என்றும்
உன் குரலோடு வாழ்ந்த நான்
இன்று
பல குரலோடு பாசம்மில்லாமல்,
சிரிப்பில்லாமல் சிலையாய் வாழ்கின்றேன்........

அப்பா,

வலியோடு வழியில்லாமல்
என்னை அனுப்பிவைத்தாய்
இங்கு
உன் வலியோடு
நான் வழித்தேடி அழைக்கின்றேன்...

இந்த வலியும் வழியும் மறக்க
உன் வளி வேண்டும் - அப்பா !

வாழ்க்கை என்றால் வாழ்ந்து பார் என்றாய்
இதோ வாழ்கின்றேன் , இங்கு நீ இல்லாமல்
உன் நினைவோடு.........

என் விழிநீர் வழிந்தோடும்
உன் உயிர்நீர் தேடி
உன் மகன் உயிரோடு........

-ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (26-Aug-16, 11:01 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 938

மேலே