செக் மோசடிகளை தடுக்க சில முக்கிய வழிகள்

பணத்தை பறிமாற்றம் செய்ய பல வழிகள் உள்ளது. முன்பு எல்லாம், ஒர் இடத்திற்கும் மற்றோர் இடத்திற்கு பணத்தை கொண்டு செல்லும் போது மிகுந்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும். ஆனால் இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ச்சியினால் அதற்கு பல வழிகள் வந்துவிட்டது.

அவை செக், ஏடிஎம், நெட் பேங்கிக், விர்சுவல் கார்டு இன்னும் பல. ஏடிஎம், நெட் பேங்கிக், விர்சுவல் கார்டு செயல்பாடுகள், அதில் நடக்கும் மோசடிகளை பற்றி நாம் அறிந்திருப்போம். இங்கு அதைப்பற்றிய அறிவுறுத்தல்களை பார்ப்போம்.

பெரும்பாலான நேரங்களில் பணத்திற்கு பதிலாக காசோலை கொடுப்பது பல வழிகளில் நன்மையானதாகும். முதலாவதாக, காசோலை மூலம் நாம் ஒருவருக்கு கொடுக்கும் பணம் நமது வங்கி கணக்கில் இயல்பாகவே பதிவு செய்யப்பட்டு விடுகிறது. பின் தேதியிட்ட காசோலையை இன்று கொடுத்தாலும் அதை பதிவு செய்யப்பட்ட தேதியில் தான் பணத்தை எடுக்க முடியும். எப்படி இருந்தாலும் காசோலையை கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. இல்லையெனில் பல வித தொந்தரவுகள் மற்றும் பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

குறுக்கு கோடிட்ட காசோலை

ஒரு தனி நபருடைய வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்கு கொடுக்கும் காசோலையில் எப்போதும் இடது பக்க மேல் முனையில் இரண்டு கோடுகளிட்டு A/c Payee என எழுத நினைவில் கொள்ளவும். இந்த வழிமுறையால் பணம் யார் பெறுகிறாரோ, அவருடைய வங்கி கணக்கில் மட்டுமே பணம் செலுத்தப்படும்.

பேரர் என்ற வார்த்தை

PAY என்ற இடத்தின் முடிவில் உள்ள பேரர் (Bearer) என்ற வார்த்தையைத் தவறாமல் அடித்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது காசோலையில் எழுதப்பட்டுள்ள வங்கி கணக்கு எண்ணில் மட்டுமே பணம் செலுத்தப்படுமே தவிர அதனை கொண்டு போய் கொடுப்பவரின் பெயரில் பணம் கொடுக்கப்பட மாட்டாது.

இந்த /- குறி ரொம்ப முக்கியம்

காசோலையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க எப்போதும் தொகையின் முடிவில் /- என்ற குறியை போடுவது சிறந்தது. ஏனெனில் இப்படி செய்வதால் எழுதப்பட்ட தொகையை திருத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. உதாரணமாக ரு.35,000 என்னும் தொகையை ரு.35,000/- என்று எழுதவும்.

பெயருக்கும் தொகைக்கும் இடையே இடைவெளி

காசோலையில் பெயருக்கும் கடைசிப் பெயருக்கும் இடையே இடைவெளியை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் அதை தவறாக பயன்படுத்தலாம். பெயருக்கும் கடைசிப் பெயருக்கும் இடையெ ஒரே ஒரு எழுத்துக்கான இடைவெளி மட்டுமே இருந்தால் காசோலையில் திருத்தங்கள் செய்வதை குறைக்கலாம்.

பெயருக்கும் தொகைக்கும் முடிவில் தொடர்கோடிடவும்

பெயருக்கும் தொகைக்கும் மேலே செலோ டேப்பால் ஒட்டினால் காசோலைக்கு மேலும் பாதுகாப்பு தரும்.

காசோலையின் விவரங்கள்

காசோலையை கொடுக்கும் போது காசோலையின் எண், கொடுக்கப்பட்ட தேதி, தொகை, பணம் பெறுபவர், அவர்களின் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து வைக்கவும். இது பிற்காலத்தில் உதவியாக இருக்கும். ஒரு வேளை காசோலையை நீங்கள் நிராகரிக்க/ திரும்பப் பெற விரும்பினால் இவ்விவரங்கள் உதவியாக இருக்கும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (27-Aug-16, 2:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே