மலர்களின் தேசம்
இளவேனிற் காலமொன்றில்
இருவரும் நனைந்து கிடந்தோம்
மரத்தின் நிழல் ஒன்றில்
மடியில் அவள் வீழ்ந்தாள்
மரணம் சுகமென்று
அன்றுவரை நான் நினைத்ததில்லை
மலர் ஒன்று மடியில்
தேன் கொண்டு எனை அழைக்க
குனிந்தேன் குடிக்க ஆசைகொண்டு
வண்டுகள் எச்சரிக்கை செய்கின்றன
மலர்கள் அவர்களின் ராஜ்யமென்று