மனதோடு பேசு

.
===============
வார்த்தைக்கு வார்த்தை வளர்கின்ற வம்புகள்
கோர்க்கின்ற சண்டை குழப்பத்தில் சேர்த்துவிடும்
நேரத்தில் நீதான் நிதானத் துடனுந்தன்
ஈர மனதோடு பேசு.

மௌனத்தைப் பேசும் மலரிதழ்கள் மேல்பனி
சௌமியம் சிந்திடும் சாந்தத்தின் – கௌரவத்தை
உன்னுயிரில் சேர்த்துவைக்க ஒவ்வொரு வேளையும்
அன்பு மனதோடு பேசு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Aug-16, 2:19 am)
Tanglish : manathoodu pesu
பார்வை : 108

மேலே